Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் தோல்வி…. இந்திய அணியைக் கடுமையாக விமர்சனம் செய்த சரத்குமார்!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (17:22 IST)
நடிகர் சரத்குமார் இந்திய அணியின் மோசமான தோல்வியை விமர்சனம் செய்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்றைய நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கோட்டைவிட்டது. இதனால் மோசமான தோல்வியைத் தழுவியது. இதனால் கடுமையான விமர்சனங்களை இந்திய அணி எதிர்கொண்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட்டை தொடர்ந்து பார்த்துவரும் தமிழ் நடிகரான சரத்குமார் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய டிவீட்டில் ‘அவமானகரமான பொறுப்பற்ற ஆட்டம். இன்னும் நாம் ஆப்கானிஸ்தான், நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளால் தோற்கடிக்கப்படும் முன் நாம் வெளியேறிவிடவேண்டும். மற்ற நாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்காக விளையாடுகிறார்கள். அதனால் டி 20 ஆட்டத்தை தெரிந்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நம் வீரர்கள் ஐபிஎல் விளையாடட்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னது ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ரி ரிலீஸாகிறதா?

மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் டிக்கெட்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

இந்த வயசில் அந்த ஜானரில் ஒரு படமா?.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

விஜய்யின் ‘சச்சின்’ படத்தின் ரி ரிலீஸோடு மோதும் ரஜினியின் சூப்பர்ஹிட் படம்!

நல்ல விமர்சனங்கள் வந்தும் ஏன் விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ பெரிய வசூல் செய்யவில்லை.. தலைவன் வரலாறு அப்படி!

அடுத்த கட்டுரையில்
Show comments