Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீர்த்தி சுரேஷின் முதல் பாலிவுட் திரைப்படம் - அறிவிப்பை வெளியிட்ட போனி கபூர்!

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (17:45 IST)
சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளவர் நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய  சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். 


 
பாலிவுட் சினிமாவின் உச்ச தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிநடைபோட்ட திரைப்படம்  நேர்கொண்ட பார்வை. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் அஜய் தேவ்கன் வைத்து புது படமொன்றை இயக்கவுள்ளார். 
 
இந்த திரைப்படம் 1952 முதல் 1962 வரையிலான இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த அப்துல் ரஹீமின் வாழ்கையை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு  “மைதான்” என்ற தலைப்பு வைக்கப்பட்டது.   இப்படத்தில்  சமீபத்தில் தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். 
 
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஆகஸ்ட் 19) வெளியாகியுள்ளது. இதை பார்த்த கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் துவங்கியது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாளை வெளியாகிறது விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கில் ‘Sawadeeka’!.. டிரைலர் எப்போது?

ஈரம் பட கூட்டணியின் அடுத்த படம் ‘சப்தம்’.. ரிலீஸ் தேதி இதுதான்!

நடிகர் சிவராஜ்குமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது…!

விடாமுயற்சி படத்தின் அனைத்துப் பணிகளையும் முடித்துக் கொடுத்த அஜித்!

ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்.. கமல்ஹாசனின் சோக பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments