Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களுக்கு அற்புதமான ட்ரீட்! தீபாவளி விருந்தாக வரும் 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்'!

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (16:21 IST)
இந்தி சினிமாவின் டாப் நடிகர்களான அமிதாப்பச்சன் மற்றும் அமிர்கான் இணைந்து நடித்துள்ள 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் 8ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தியில் உருவாகியுள்ள இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து சில விஷயங்களை இப்போது பார்ப்போம்.
கடந்த 1839ம் ஆண்டில் வெளியான 'கன்பெஷன் ஆப் ஏ தக்' என்ற நாவலை தழுவி, விஜய் கிருஷ்ணா ஆச்சர்யா இயக்கியுள்ளார், ஆதித்யா சோப்ரா பிலிம்ஸ் பிரம்மாண்டமான முறையில் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படமாக உருவாக்கியுள்ளது.
 
1795ம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனி இந்தியாவுக்கு வந்தது. அப்போது அவர்கள் வணிகம் செய்ய இங்கு வந்தனர். ஆனால்  காலப்போக்கில்  அவர்கள் நாட்டையே ஆண்டனர். அந்த காலக்கட்டத்தில் பிரிட்டீஸ்கார்களுக்கு ஆசாத் (அமிதாப்) கடும் சவால் விடும் வகையில் போராடுவார். 

இந்நிலையில ஆசாத்தை (அமிதாப்பை) ஒழித்துக்கட்ட பிராங்கியை (அமிர்கான்) பிரிட்டீஸ்கார்கள் களம் இறக்குகிறார்கள். அவர் பின்னாளில்  ஆசாத்துடன் கைகோர்த்து செயல்பட ஆரம்பிக்கிறார். இறுதியில் அமிர்கான் டுவிஸ்ட் அடிக்கிறார். இதனால் நடைபெறும் சம்பவங்களே  படத்தின் கதையாக வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் கப்பலில் நடப்பது போன்று இருக்கிறது. ப்ராங்கியாக வரும் அமிர்கான்  பாட்டு மற்றும் நடிப்பில் மிரட்டியிருப்பது ட்ரெய்லரிலேயே சூப்பராக தெரிகிறது. இதேபோல் கம்பீரமான தோற்றத்தில் ஒரு தலைவனாக காட்சி அளிக்கிறார் அமிதாப்பச்சன். காத்ரீனா கைப் மற்றும் பாத்திமாவுக்கு இந்த படத்தில் காதல் காட்சிகள் மட்டுமல்லாமல், ஆக்சன் காட்சிகளும்  அம்சமாக உள்ளது.
 
பெரும் பொருட்செலவில், மிகப்பிரம்மாண்டமான அழகியல் நிறைந்த காட்சிகளாக உருவாகி உள்ள 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியானது. 
 
இந்த ட்ரெய்லரை இதுவரை 7 கோடியே 28 லட்சம் பேர் இதுவரை பார்த்து ரசித்துள்ளனர். 10 லட்சத்து 20 ஆயிரம் ட்ரெய்லரை இதுவரை லைக் செய்துள்ளனர். வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 8ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்'. இந்த  படம் இந்திய சினிமா ரசிகர்களுக்கு பாகுபலியை போல் பெரும் பிரம்மாண்டமான விருந்தாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் விட்டுக் கொடுத்திருக்கணும்… நயன்தாரா வழக்கு சம்மந்தமாக மன்சூர் அலிகான் கருத்து!

குடும்பத்த மொதல்ல பாருங்க… ரசிகர்களுக்காக அஜித் வெளியிட்ட வீடியோ!

இரண்டு பாகங்கள் இல்லை ஒரு பாகம்தான்.. கார்த்தி 29 படத்தில் நடந்த மாற்றம்!

அக்மார்க் சுந்தர் சி படம்… பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் மத கஜ ராஜா!

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ… இப்போது எந்த நடுக்கமும் இல்லை எனக் கூறி விஷால் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments