Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பட்டாசுத் தொழில் பின்னடைவு –உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி

பட்டாசுத் தொழில் பின்னடைவு –உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி
, வெள்ளி, 26 அக்டோபர் 2018 (10:12 IST)
உச்சநீதிமன்றம் பட்டாசு தயாரிப்பு மற்றும் உபயோகத்தில் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பட்டாசு உற்பத்தி தொழில்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றம் கடந்த 23-ந்தேதியன்று தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது பட்டாசு வெடிப்பதற்கும் மற்றும் அதிகளவில் வண்ணம் மற்றும் ஒலியை உமிழும்  பட்டாசுகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்து தீர்ப்பளித்தது.

தற்போது தமிழகத்தில்  அலுமினியம் பாஸ்பேட், வெடி உப்பு எனப்படும் பொட்டாஷியம் நைட்ரேட், பச்சை வண்ணத்தை வெளியிடும் பேரியம் நைட்ரேட், சிவப்பு வண்ணத்தை வெளியிடும் ஸ்ட்ராங்ஷியம் நைட்ரேட், அலுமினிய கம்பி, அலுமினியம் பவுடர், மெக்னீஷியம், மெக்னாலியம், பெர்ரோ டைட்டானியம், பொட்டாஷியம் நைட்ரேட், பேரியம், கரித்தூள் ஆகியவற்றை உட்போருளாகக் கொண்டு ஒலி, ஒளி மற்றும் வண்ணங்களை உமிழும் வகையில் 300க்கும் மேற்பட்ட பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
ஆனால் உச்சநீதிமன்றம், பட்டாசு தயாரிப்பின் முக்கியமானது பேரியம் உள்ளிட்ட சில வேதிபோருள்களை பயன்படுத்தக்கூடாது என தடை விதித்துள்ளது.. கம்பி மத்தாப்பு, பூச்சட்டி, தரைச்சக்ககரம், சாட்டை, பென்சில் வெடிகளில் வர்ணத்தை உமிழ்வதற்கு பேரியம் முக்கியமான ரசாயனமாகப் பயன்படுத்தப்படுகிறது. எனெவே பேரியத்தின் மீதான தடை பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பேரிடியாகும்.

நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் கிட்டதட்ட 95 சத்வீதம் பட்டாசுகள் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. கிட்டதட்ட 1000 தொழிற்சாலைகளில் வேலை செய்து வரும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிப்புக்க்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய கடும் கட்டுப்பாடுகளால் சிறிய அளவில் பட்டாசு தொழிலில் ஈடுபடுவோரின் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்ட இடத்தில் கையை வைத்தார்: டிஎஸ்பி மீது பெண் எஸ்.ஐ புகார்