Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் இர்பான் கான் மறைவு! – அரசியல் பிரபலங்கள் அஞ்சலி!

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (12:59 IST)
பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் மறைவுக்கு அரசியல் பிரபங்களும், திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்திய திரைப்படங்களில் முக்கியமாக பாலிவுட் படங்களில் மிக சிறந்த நடிகராக அறியப்படுபவர் இர்பான் கான். முக்கியமான மாஸ் ஹீரோவாக இல்லாவிட்டாலும் கூட மதிப்பு மிக்க குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவரது நடிப்பில் வெளியான லஞ்ச் பாக்ஸ், ப்ளாக்மெயில் போன்ற படங்கள் விமர்சனரீதியா வரவேற்பை பெற்றவை. இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டில் ஜுராசிக் வேர்ல்ட், லைஃப் ஆப் பை போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

கடந்த சில ஆண்டுகளாக குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இர்பான் கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்புக்கு அஞ்சலி செலுத்தியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ”இர்பான் கானின் இரங்கல் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பன்முக தன்மை கொண்ட சிறந்த நடிகரான அவர் உலகம் முழுவதிலும் அறியப்பட்ட இந்திய நடிகராவார், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு, ரசிகர்களுக்கும் எனது அஞ்சலிகள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கெயிஃப், நடிகை பிரியங்கா சோப்ரா, அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி உள்ளிட்ட பிரபங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மோகன்லாலின் ‘எம்பூரான்’ ரிலீஸில் சிக்கல்.. இதுதான் காரணமா?

தன்னுடைய 60 ஆவது பிறந்தநாளில் காதலியை அறிமுகப்படுத்திய அமீர்கான்..!

பராசக்தி படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்..!

கீர்த்தி கேரக்டர் எனக்கு ஏன் இல்லை, ஏன் பல்லவி.. ‘டிராகன்’ நடிகையின் இன்ஸ்டா பதிவு..!

’குட் பேட் அக்லி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு.. 3 நிமிட வீடியோவை வெளியிட்ட இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments