Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனிமையான 'பாய் பிரண்ட்' தேடிய பிக்பாஸ் நடிகை.

Advertiesment
இனிமையான 'பாய் பிரண்ட்' தேடிய பிக்பாஸ் நடிகை.
, ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (15:08 IST)
இந்தியில் பிக்பாஸ் 12வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது.  இதில் பஜனை சாமியாரான 64 வயதாகும் அனுப் ஜலோடா என்பவரும் 28 வயதாகும்  ஜஸ்லின்  மதருவும் ஜோடியாக பங்கேற்றுள்ளனர்.


இந்த காதல் ஜோடி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை பெரிதாக இதுவரை கவரவில்லை என்றாலும், இவர்களது வயதுக்குக்கு மீறிய காதல் சோஷியல் மீடியாக்களில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

பஜனை பாட்டு பாடும் அனுப்பும், அவரது காதலி ஜஸ்லினும் பிக்பாஸ் 12 வது சீசன தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இருவரும் 3.5 வருடங்களாக டேட்டிங்கில் ஈடுபடடுவதாக சல்மான்கானிடம் கூறி அதிரவைத்தனர்.

webdunia

இந்நிலையில் ஜஸ்லின் கூறியது எல்லாம் பொய்  என்பது போல் ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு ஜஸ்லின், ஆன்லைனில் பாய் பிரண்ட் தேடி இருக்கிறார்.  தான் சிங்கிளாக இருப்பதாகவும், தனக்கு இனிமையான, தன்னை புரிந்து நடந்து கொள்ளக்கூடிய காதலன் வேண்டும் என்று வீடியோவில் பேசுகிறார்கள். இந்த வீடியோவை தேடிபிடித்த நெட்டிசன்கள், 3.5 வருஷமாக காதலிப்பதாக சல்மான்கானிடம் ஜாஸ்லின் பொய் சொல்லி இருப்பதாக கிண்டலடித்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாரோ டப்பிங் பேசிட்டாங்கன்னு சொல்ல வேண்டியதுதான? - தெறிக்கும் மீம்ஸ்