அமிதாப்பச்சனின் பா மிகப் பெரிய வெற்றி. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும். இதையடுத்து வெளியான படம் தீன் பத்தி. அமிதாப்பச்சனுடன் ஹாலிவுட் நடிகர் பென் கிங்ஸ்லி, மாதவன் ஆகியோர் நடித்திருந்தனர்.
பிரபல நடிகர்கள் இணைந்து நடித்தப் படம் என்பதால் பா-வை விட அதிக கலெக்சனை தீன் பத்தி பெற்றுத்தரும் என அனைவரும் நம்பினர். ஆனால், ரசிகர்கள் அதனை பொய்த்துப் போகச் செய்துள்ளனர்.
சென்ற வாரம் வெளியான இந்தப் படத்தைப் பார்க்க பத்து முதல் பதினைந்து சதவீதம் பேர் மட்டுமே ஆர்வம் காட்டினர். மல்டிஃபிளிக்ஸ்கள் படத்துக்கான டிக்கெட் தாராளமாகக் கிடைத்தது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பத்து முதல் பதினைந்து சதவீதமாக இருந்தது இருபது முப்பது என சிறிது மேம்பட்டது.
இந்தப் படத்தைவிட கார்த்திக் காலிங் கார்த்திக் படத்துக்கு ரசிகர்கள் அதிக ஆதரவளித்துள்ளனர். தீன் பத்தி டீமுக்கு இது பலத்த அடிதான்.