Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சந்திரகுமாரா? : டிவிட்டரில் கலாய்த்த ராமதாஸ்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சந்திரகுமாரா? : டிவிட்டரில் கலாய்த்த ராமதாஸ்
, புதன், 13 ஏப்ரல் 2016 (16:09 IST)
தேமுதிக-விலிருந்து விலகி, திமுகவில் இணைந்து மூன்று தொகுதிகளை பெற்றுள்ள சந்திரகுமார் அணியினை பாமக நிறுவனர் ராமதாஸ் சமூகவலைப் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார். 


 

 
மக்கள் நலக் கூட்டணியுடன், தேமுதிக கூட்டணி சேர்ந்தது தவறு என்றும், திமுகவுடன் கூட்டணி வைப்பதே சிறந்தது என்று குரல் எழுப்பி, தேமுதிக முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார், எஸ்.ஆர். பார்த்தீபன், சி.எச்.சேகர் மற்றும் சில நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி, மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.
 
எதிர்பார்த்தது போலவே, திமுகவிலிருந்து அழைப்பு வர, அவர்கள் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக பொருளாலர் ஸ்டாலினை சமீபத்தில் சந்தித்து பேசினர். 
 
அவர்களுக்கு, தேமுதிகவில் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மக்கள் தேமுதிகவை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்களும், உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறார்கள்.
 
இந்நிலையில், இதுபற்றி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சந்திரகுமாரா?” என்று கிண்டலடித்துள்ளர்.

webdunia

 

Share this Story:

Follow Webdunia tamil