Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேல் பாலாஜி மரணம்: கடைசி காலத்தில் மருத்துவ கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த குடும்பம்

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (14:41 IST)
பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 45 .
 
வடிவேல் பாலாஜிக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பாலாஜியின் இரு கைகளும் செயலிழந்ததாக கூறப்படுகிறது. 
 
இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அங்கு மருத்துவமனையில் கட்டணம் செலுத்த முடியாத நிலையால் வடிவேல் பாலாஜியின் குடும்பம் தவித்தது.
 
பிறகு சென்னையிலேயே மற்றொரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கிருந்து ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படும் நிலையில், அங்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். 
 
இந்த நிலையில் தான், இன்று காலை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். வடிவேல் பாலாஜிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது திடீர் மரணம், திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

தொட்டிலில் தூங்கிய 24 நாள் குழந்தை.. குரங்கு கடித்து குதறியதால் பெற்றோர் அதிர்ச்சி..!

19 வயது பெண்ணை காதலித்த இரு இளைஞர்கள்.. கொலையில் முடிந்த முக்கோண காதல்..!

மேற்கு வங்க ரயில் விபத்து..! பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு..! மீட்பு பணி தீவிரம்..!!

பிரதமர் மோடியின் தமிழகம் பயணம் திடீர் ரத்து! என்ன காரணம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments