Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்கெட் சாராயத்துக்கு தடை: உகாண்டாவில் மதுவுக்கு அதிரடி கட்டுப்பாடு!

Webdunia
திங்கள், 3 ஜூன் 2019 (14:38 IST)
பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி உகாண்டா நாட்டு அதிகாரிகள் பாக்கெட் சாராயத்துக்கு தடை விதித்துள்ளனர். 
 
45% அளவுக்கு ஆல்கஹால் இருக்கும் இந்த மதுபானங்கள் வருவாய் குறைவாக உள்ளவர்களால் அதிகமாக உட்கொள்ளப்பட்டு வந்தது. இந்த பாக்கெட் சாராயம் பள்ளி மாணவர்கள்கூட வாங்கி அருந்தும் சூழல் இருந்ததாக உகாண்டா வர்த்தகம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமெலியா க்யம்பாதே பிபிசியிடம் தெரிவித்தார்.
 
ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமான மது உட்கொள்வோரைக் கொண்டுள்ள நாடுகளில் உகாண்டாவும் ஒன்று. உகாண்டா மக்கள்தொகையில் 21% பேர் அளவுக்கும் அதிகமானோர் மதுவை உட்கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
 
மதுபான உற்பத்தியாளர்கள் இனிமேல் 200 மில்லிக்கும் குறையாத அளவுள்ள பாட்டில்களில் மட்டுமே மதுவை அடைத்து விற்பனை செய்ய முடியும். அங்கு மது விற்பனைக்கு என்று தனியாக எதுவும் கொள்கை மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில் இந்த முயற்சி உகாண்டா மக்கள் மது அருந்துவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உள்ளது.
 
வீட்டில் தயாரிக்கப்படும் மதுவைக் கட்டுப்படுத்தும் சட்டம் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments