Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரிட்டனில் மூன்றாவது ‘ஒமிக்ரான்’ தொற்று கண்டுபிடிப்பு

Advertiesment
Third Omicron
, திங்கள், 29 நவம்பர் 2021 (23:30 IST)
பிரிட்டனில் மூன்றாவது நபருக்கு கொரோனா ஒமிக்ரான் திரிபு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
 
பாதிக்கப்பட்ட நபர் தற்போது பிரிட்டனில் இல்லை எனவும், அவர் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதிக்கு வந்துசென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக கட்டாய முகக் கவசம் உள்ளிட்ட நடவடிக்கைகளை பிரிட்டன் அரசு எடுத்துவரும் நிலையில், இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது.
 
தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் திரிபு மிகவும் வேகமாகப் பரவக்கூடிய அபாயம் கொண்டதாக இருக்கலாம் என தொடக்ககட்ட ஆய்வுகளில் தெரிய வருகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரயில்வே பணிக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற அடைய வேண்டாம்- ரயில்வேதுறை