Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: செய்தியாளர் சந்திப்பை விட்டு சென்ற டிரம்ப்

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (10:25 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது வெள்ளை மாளிக்கைக்கு வெளியே ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளால்  சுடப்பட்டார்.

திங்களன்று, டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது டிரம்பின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அவரின் அருகில் சென்று காதுக்குள் முணுமுணுத்தார்.  அதன்பிறகு டிரம்ப் "என்ன நடக்கிறது" என்று கேட்டு, பின் செய்தி அறையைலிருந்து சென்றார்.
 
அதன்பின் ஒன்பது நிமிடங்கள் கழித்து திரும்பிவந்த டிரம்ப் பத்திரிகையாளர்களிடம் வெள்ளை மாளிக்கைக்கு அருகில் ஆயுதம் வைத்திருந்த நபர் ஒருவர் அமெரிக்க  பாதுகாப்பு சேவையால் சுடப்பட்டார் என்று தெரிகிறது என்றார்.
 
இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும், ஆனால் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
 
சுடப்பட்ட நபர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
 
`இந்த சம்பவத்தால் பதற்றம் அடைந்துள்ளீர்களா` என டிரம்பிடம் செய்தியாளர்கள் கேட்டபோது. "என்னை பார்த்தால் பதற்றமாக தெரிகிறதா," என டிரம்ப் கேட்டார்.
 
சுடப்பட்ட நபர் மன நிலை பாதிக்கப்பட்டவரா என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments