Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிஸ் டிரஸ் பதவி விலகல்: அடுத்த பிரிட்டன் பிரதமர் தேர்வு எப்படி நடைபெறும்?

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (23:05 IST)
பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் அக்டோபர் 20ஆம் தேதி பதவி விலகியதையடுத்து யார் அடுத்த பிரதமர் என்ற கேள்வி பரவலாக தேடுபொருளாகியுள்ளது. அதே போல, அடுத்த பிரதமரை கன்சர்வேட்டி கட்சி என்ன முறையில் தேர்வு செய்யும் என்பது குறித்தும் பலரும் தேடி வருகின்றனர். இதுபோன்ற கேள்விகளுக்கான விடைகள் இதோ.

 
இதற்கு முன்னதாக, கன்சர்வேட்டிவ் கட்சியின் ஒரு பிரதமர் பதவி விலகினால் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர், பதவியில் இருப்பார்.
 
தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?
 
8 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பவர் தலைவர் தேர்தலுக்கு போட்டியிடலாம்.
 
போட்டியிடப்போவது யார் யார் என்று உறுதியான பிறகு, இரண்டுக்கு மேற்பட்ட போட்டியாளர்கள் இருந்தால், இரண்டு பேராகும் வரை பல சுற்றுகள் தொடர் வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யலாம்.
 
 
முதல் சுற்றில் போட்டியாளர்கள் 5% வாக்குகளைப் பெற வேண்டும். அப்படி பெற முடியாதவர்கள் வெளியேற வேண்டும்.

 
இரண்டாம் சுற்றில் 36 பேரின் வாக்குகளைப் பெற வேண்டும்

 
இப்படியாக தொடர்ந்து வரும் சுற்றில் கடைசியாக இரண்டு போட்டியாளர்கள் மட்டும் மீதமிருக்கும் நிலையில், நாட்டிலுள்ள அனைத்து கன்சர்வேட்டி கட்சி உறுப்பினர்களும் வாக்களித்து தலைவரை தேர்வு செய்வர்.
 
 
கட்சியின் தேர்தலில் வெல்லும் போட்டியாளர் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக ஆவார். அவரிடம் ஆட்சியமைக்க பிரிட்டிஷ் அரசர் அழைப்பு விடுப்பார்.
 
பொதுத்தேர்தல் நடக்குமா?
 
வாய்ப்பில்லை.
 
பொதுவாக, பிரதமர் பதவி விலகினால், பொதுத்தேர்தல் நடத்தப்படாது.
 
ஜனவரி 2025இல் தான் அடுத்த தேர்தல் நடைபெறும். ஒருவேளை புதிய பிரதமர் விரும்பினால், பொதுத்தேர்தல் நடைபெறலாம்.
 
தற்போதைய நிலவரப்படி, உறுதிப்படுத்தப்பட்ட ஆட்கள் யாரும் இல்லை. ஆனால், சில அரசியல் தலைகளின் பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன.
 
ரிஷி சூனக், சஜித் ஜாவித், ஜெர்மி ஹண்ட் ஆகியோர் ஏற்கெனவே நடைபெற்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டவர்கள். அவர்கள் இந்த முறையும் போட்டியிட வாய்ப்புண்டு.
 
 
அதிகாரபூர்வமாக பிரதமர் பதவியை விட்டு விலகும் வரை லிஸ் டிரஸ்ஸுக்கு தற்போதிருக்கும் எல்லா அதிகாரங்களும் அப்படியேதான் இருக்கும். இது ஏட்டளவில் மட்டுமே. ஆனால் உண்மையில், புதிய கொள்கைகளைக் கொண்டு வருவது போன்ற அதிகாரங்களை அவர் பயன்படுத்த முடியாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments