Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராமர் கோயில் கட்ட சொல்லி குவைத் பாடகர் பாடினாரா?

ராமர் கோயில் கட்ட சொல்லி குவைத் பாடகர் பாடினாரா?
, புதன், 13 பிப்ரவரி 2019 (14:44 IST)
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முன்னிலையில் குவைத்தை சேர்ந்த ஷேக் ஒருவர், `ராமர் கோயில்` கட்டுவது குறித்து பாடுவது போலான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.



கடந்த 48 மணி நேரங்களில் அந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்துள்ளனர்."குவைத்தை சேர்ந்த ஷேக்கான முபாரக் அல் ரஷித், அயோத்தியாவில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று பாடும் இந்த காணொளியை நிச்சயம் காண வேண்டும்" என இந்த காணொளி பலரால் பகிரப்பட்டது.
அந்த மனிதர் பாடும்போது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் உடனிருக்கிறார். அந்த மனிதர் காணொளியில், எப்போது ராமர் கோயில் கட்டப்படும் என்ற தொனியில் பாடல் ஒன்றை பாடுகிறார்.

நமது ஆய்வில், இந்த காணொளி திருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதே காணொளி 2018ஆம் ஆண்டும் பகிரப்பட்டுள்ளது.

webdunia


வீடியோவின் உண்மை நிலை என்ன?

நமது ரிவர்ஸ் தேடலில், இந்த காணொளி 2018ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதியன்று எடுக்கப்பட்டது என்று தெரிகிறது.இது குவைத்தில் உள்ள இந்திய மக்களை சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்தபோது எடுக்கப்பட்ட காணொளி என்று தூர்தர்ஷன் தொலைக்காட்சி செய்தி கூறுகிறது. குவைத்தில் சுஷ்மா ஸ்வராஜுக்கு மரியாதை வழங்கும் நிகழ்ச்சியில் இந்த காணொளி எடுக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில், குவைத் பாடகர் முபாரக் அல் ரஷித்தும் பங்கேற்றார். அதில் இரண்டு இந்தி திரைப்பட பாடல்களை அவர் பாடியுள்ளார். மேலும் அதில் மகாத்மா காந்திக்கு பிடித்தமான `வைஷ்னவ ஜனத்தோ` என்ற ஒரு குஜராத்தி கீர்த்தனையை பாடியுள்ளார். இந்த வீடியோவை சுஷ்மா ஸ்வராஜின் செய்தி தொடர்பாளர், 2018ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

webdunia


மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளில், 124 நாடுகளை சேர்ந்த பாடகர்கள் அந்த கீர்த்தனையை பாடி அனுப்பினார்கள்; அதில் முபாரக் அல் ரஷித்தும் ஒருவர் என சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரலாற்றில் முதல்முறையாக ஆளுனர் அலுவலகம் முன் தர்ணா செய்யும் முதல்வர்