Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

13 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை – தந்தையின் நண்பர் கைது

Advertiesment
13 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை – தந்தையின் நண்பர் கைது
, புதன், 7 டிசம்பர் 2022 (14:04 IST)
சேலத்தில் 13 வயது சிறுமி 5 மாதம் கர்ப்பம் ஆனதையடுத்து மாணவியுடைய தந்தையின் நண்பர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சேலம் குரங்கு சாவடி பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளியின் மகளுக்கு 13 வயதாகிறது. இந்த மாணவி அரசுப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த மாணவிக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் பெற்றோர் மாணவியை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  அங்கு மருத்துவர்கள் மாணவியைப் பரிசோதனை செய்து பார்த்தபோது மாணவி ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், இந்த சம்பவம் குறித்து சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமியும் போலீசாரும் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது தந்தையின் நண்பர் ஞானமூர்த்தி என்பவர் தன்னிடம் பாலியல் தொல்லை செய்ததாக சிறுமி தெரிவித்தார்.

இதையடுத்து ஞானமூர்த்தியை போலீசார் அழைத்து விசாரித்தனர். அப்போது தான் கட்டிட வேலைக்குச் செல்வதாகவும் மாணவியின் தந்தை தனக்கு நண்பர் என்றும் கூறிய ஞானமூர்த்தி அவ்வப்போது மாணவியின் வீட்டிற்கு வந்து சென்றதாகவும் அந்தநேரத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து ஞானமூர்த்தி கடந்த 6ஆம் தேதி இரவு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். மேலும், அன்றிரவே ஞான மூர்த்தி சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவை செல்வராஜ் விலகலால் எந்த பாதிப்பும் இல்லை.. ஓபிஎஸ் தரப்பு