Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் தொழிலுக்கான தண்டனையில் மாற்றம் கொண்டு வந்த சீனா

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (15:41 IST)
பாலியல் தொழிலுக்கான தண்டனையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது சீனா. 
 
இந்த மாற்றமானது டிசம்பர் 29 முதல் அமலுக்கு வரும். இதுநாள் வரை பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களது வாடிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டால், இருதரப்பையும் கட்டாய வேலையில் ஈடுபடுத்தி வந்தது சீனா.
 
அதாவது, இவர்கள் பொம்மைகள், வீட்டு உபகரணங்கள் உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தார்கள். இதனைக் கல்வி மையங்கள் என அழைத்து வந்தது சீனா. இனி இந்த வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.
 
அதுபோல, கைது செய்யப்பட்டு இதுபோன்ற மையங்களில் இருப்பவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். ஆனால், அதே நேரம் சீனாவில் பாலியல் தொழிலானது சட்ட விரோதமானதுதான். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட இதுபோன்ற மையங்கள் சிறந்த பலன்களைக் கொடுத்ததாகக் கூறும் சீனா, தற்போதைய கால சூழலில் அவை பொருத்தமற்றதாக ஆகிவிட்டதாகக் கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்