பாகிஸ்தான் முன்னாள் ராணுவத் தளபதி முஷாரப்-க்கு வழங்கப்பட்ட தண்டனை மிகவும் கொடுமையானது ராஜேந்திர பாலாஜி வருத்தம்.
பாகிஸ்தானில் 1999 ஆம் ஆண்டு நவாஷ் ஷெரிப்பின் ஆட்சியைக் கலைத்து அதிபரானார் ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரப். தன்னுடைய ஆட்சியின் 8 ஆவது ஆண்டில் 2007 ஆம் ஆண்டு அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். இதன் பின்னர் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது.
அதன் பின்னர் ஆட்சியமைத்த நவாஷ் ஷெரிப் 2013 ஆம் ஆண்டு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியதற்காக முஷாரப் மீது தேசதுரோக வழக்கைப் பதிவு செய்யப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து முஷாரப் தப்பித்து துபாயில் தஞ்சமடைந்தார்.
இதுசம்மந்தமான வழக்கு பெஷாவர் நீதிமன்றத்தில் நடந்து 6 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முஷாரப் குற்றவாளிதான் என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது. முஷாரப் இப்போது உடல்நல பாதிப்பால் துபாயில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முஷாரப் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, பாகிஸ்தான் முன்னாள் ராணுவத் தளபதி முஷாரப்-க்கு வழங்கப்பட்ட தண்டனை மிகவும் கொடுமையானது. முஷாரப் எப்பொழுதும் பாகிஸ்தான் இறையான்மைக்கு எதிராக ஒன்றும் செய்ததாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.