Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கலில் சீனா: மின்சாரத்துக்கு அடுத்து டீசலுக்கும் தட்டுப்பாடு

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (15:28 IST)
சீனாவில் உள்ள பல பெட்ரோல் நிலையங்கள் டீசலை குறிப்பிட்ட அளவிலேயே மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றன.

குறைந்த டீசல் விநியோகம் மற்றும் அதிகரித்து வரும் விலை உயர்வால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
சில ட்ரக் ஓட்டுநர்கள் டீசல் நிரப்ப நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக சீனாவின் சமூக வலைத்தளமான வெய்போவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு பதிவில் கூறப்பட்டிருந்தது.
 
சீனாவில் தற்போது நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அங்கு கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
ஏற்கனவே அடிவாங்கியிருக்கும் சர்வதேச விநியோக சங்கிலி இந்த சமீபத்திய தட்டுப்பாடால் மேலும் அதிகரிக்கும்.
 
தற்போது ஏற்பட்டுள்ள இந்த டீசல் தட்டுப்பாடு, நீண்டதூர வர்த்தகத்தை பெரிதும் பாதிக்கிறது. குறிப்பாக சீனாவுக்கு வெளியில் உள்ள சந்தைகளுக்கு செல்லும் வர்த்தகத்தை இது கடுமையாக பாதிக்கிறது என பொருளாதார புலனாய்வு பிரிவின் சீன இயக்குநர் மேட்டி பெங்கிங் தெரிவித்துள்ளார்.
 
கொரோனா தொற்றால் முடங்கியிருந்த பல வர்த்தகங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியதால் சர்வதேச அளவில் விநியோக சங்கிலி பெரிதும் பாதிக்கப்பட்டது.
 
சீனாவில் தற்போது டிரக்குகள் வெறும் 100 லிட்டர் டீசல்களை மட்டுமே நிரப்பி கொள்ள வேண்டும். அது அவர்களின் மொத்த அளவில் வெறும் 10 சதவீதமே ஆகும்.
 
சில பகுதிகளில் ஓட்டுநர்கள் வெறும் 25 லிட்டர்கள் மட்டுமே நிரப்ப அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
"சில பெட்ரோல் நிலையங்களுக்கு சென்று பார்த்தேன். அங்கு டீசல் இல்லை. விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. பெரிய ட்ரக்குகளுக்கு எரிபொருள் கிடைப்பது சிரமம்" என்று வெய்போ பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இதனால் ஏற்படும் விலையேற்றம் மற்றும் டெலிவரி பணிகள் பாதிப்பு குறித்து பலர் கவலை தெரிவித்துள்ளனர். பல உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
 
சீனாவின் நிலக்கரி பற்றாக்குறை
ஆசிய பொருளாதார நிபுணரான எய்டன் யோ, சீனாவின் நிலக்கரி தட்டுப்பாடு அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் டீசல் பிரச்னை புதியது என பிபிசியிடம் தெரிவித்தார்.
 
"அனைத்து புதை படிம எரிப்பொருட்களின் விலையும் மீண்டும் உயர்ந்துள்ளது. சமீப காலமாக இந்த எரிபொருட்களில் குறைந்த மூதலீடு செய்யப்பட்ட காரணத்தால் இதற்கான விநியோகம் குறைந்துபோனது அதுவும் தேவை அதிகமாக இருந்த சூழலில்." என்கிறார் ஏய்டன்.
 
எண்ணெய், எரிவாயு, நிலக்கரி என எல்லாவற்றின் விலையும் ஒன்றன் பின் ஒன்றாக அதிகரித்துள்ளது.
 
2014ஆம் ஆண்டுக்கு பிறகு சமீப வாரங்களில் எண்ணெய் விலை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 
இதற்கு முக்கிய காரணம் சீனா மற்றும் இந்தியாவில் நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவின் தடுப்பாடு ஏற்பட்டுள்ளதே காரணம். இதனால் மக்கள் எரிபொருளை அதிகம் நாடுகின்றனர்.
 
இந்த அளவிற்கான தேவை நாள் ஒன்றிற்கு கச்சா எண்ணெயின் கொள்முதல் அளவை ஐந்து லட்சம் பேரல்களை வரை அதிகரிக்கும்.
 
சீனாவில் உள்ள தட்டுப்பாட்டை இது மேலும் மோசமாக மாற்றும். நிலக்கரி தட்டுப்பாட்டால் ஏற்பட்ட மின்சார தட்டுப்பாட்டை குறைக்க பல தொழிற்சாலைகள் டீசலில் இயங்கு ஜெனரேட்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்த டீசல் தட்டுப்பாடு அவர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
 
இந்த மின்சார தட்டுப்பாடு மற்றும் டீசல் தட்டுப்பாடு இரண்டுமே நாம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு எத்தனை விரைவில் மாற வேண்டும் என்பதை காட்டுகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காசி விஸ்வநாதர் கோவிலில் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி.. மகா கும்பமேளா விழாவில் பங்கேற்பு..!

ஸ்மார்ட்போன் விவகாரம்: மகன், தந்தை என மாறி மாறி தூக்கில் தொங்கி தற்கொலை..!

பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் நடத்துவதா? சு வெங்கடேசன் எம்பி ஆவேசம்..!

பொங்கல் தினத்தில் சென்னை கிண்டியில் குதிரைப் பந்தயம்.. லட்சக்கணக்கில் பரிசுகள்..!

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழப்பு: பக்தர்கள் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments