Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித் ஷா: ‘’ஒவைஸி சூரியன் மேற்கே உதிக்கிறது என்பார்”

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (20:14 IST)
தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கும் (NPR), தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் (NRC) எந்த தொடர்பும் இல்லை. இதை நான் இன்று தெளிவாகக் கூறுகிறேன் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) பேசிய அவர் இவ்வாறாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள்தொகை பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமித் ஷா பதிலளித்தார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸியின் நிலைப்பாடு குறித்துக் கேட்டபோது, ''சூரியன் கிழக்கே உதிக்கிறது என்று நாங்கள் கூறினால், ஒவைஸி அவர்கள் இல்லை சூரியன் மேற்கே உதிக்கிறது என்று கூறுவார். ஆனாலும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும்எந்த தொடர்பும் இல்லை என்று அவருக்கும் நான் உறுதியாகக் கூறுகிறேன்'' என்று அமித் ஷா மேலும் குறிப்பிட்டார்.

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணிக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக வந்த செய்திகள் குறித்து பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, ''இந்த இரு மாநில முதல்வர்களுக்கும் பணிவாக நான் வைக்கும் வேண்டுகோள் என்னவெனில், இம்மாதிரியான முடிவை எடுக்கவேண்டாம். உங்கள் முடிவுகளை தயவுசெய்து பரிசீலனை செய்யவும். உங்கள் அரசியலுக்காக வளர்ச்சி திட்டங்கள் ஏழைகளுக்கு சென்றடையாமல் தடுக்கவேண்டாம்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

''தற்போது தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி எந்த கலந்துரையாடலும் நடக்காததால் அது தொடர்பாக எந்த விவாதமும் நடத்த தேவையில்லை. அமைச்சரவை கூட்டம் அல்லது நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதமும் நடக்காததால் இது குறித்த பிரதமர் மோதியின் கருத்து சரியானதே'' என்று அமித் ஷா மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments