அமெரிக்க பொருளாதாரம் 30% வரை சரிவை சந்திக்கும் - மத்திய வங்கியின் தலைவர்!

Webdunia
திங்கள், 18 மே 2020 (14:34 IST)
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் பொருளாதாரத்தை 2021ஆம் ஆண்டுவரை மீட்க இயலாது என அமெரிக்காவின் மத்திய வங்கியின் தலைவர் எச்சரித்துள்ளார்.
 
மேலும் பெருந்தொற்று சூழலில் அமெரிக்க பொருளாதாரம் எளிதாக 20-30 சதவீதம் வரை சரிவை சந்திக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மத்திய வங்கியின் தலைவரான ஜெரோம் பவல் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டறியப்படாத நிலையில் பொருளாதாரத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவது இயலாத காரியம் என தெரிவித்துள்ளார்.
 
இந்த வாரத்தின் தொடக்கத்தில், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டங்களையும், மக்களுக்கான நிவாரணத் திட்டங்களையும் அதிகாரிகள் உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மார்ச் மாதத்தில் தொடங்கி இதுவரை 36 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையில்லாதவர்களுக்கான சலுகைகளை பெற விண்ணப்பித்துள்ளனர்.
 
என்ன சொன்னார் பவல்?
இது ஒரு கடினமான காலம், மக்கள் அனுபவித்து கொண்டிருக்கும் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல இயலாது, பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். ஆனால் அதற்கு சில காலம் பிடிக்கும்.
 
கொரோனா வைரஸ் இரண்டாவது முறையாக தாக்கவில்லை என்றால் இந்த வருடத்தின் பிற்பாதியில் பொருளாதாரம் சரிவிலிருந்து மீள தொடங்கும் என அவர் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயை பார்க்க 3 கிலோ மீட்டர் சாக்கடையில் நீந்தி வந்த ரசிகர்!.. வீடியோ பாருங்க!..

சட்டசபை தேர்தல் எதிரொலி!.. டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு..

திருச்சி...புதுக்கோட்டை.. தருமபுரி.. நாளை எங்கு பிரச்சாரம் செய்கிறார் விஜய்?.. ஒரே குழப்பமா இருக்கே!..

சொந்த நாட்டு மக்களை தாக்கிய விமானப்படை!.. நைஜீரியாவில் அப்பாவி மக்கள் 100 பேர் பலி!...

திருச்சி கிழக்கு தொகுதில் பிரச்சாரம்!.. அனுமதி கிடைச்சா போவாரா? ரத்து செய்வாரா?..

அடுத்த கட்டுரையில்
Show comments