Publish Date: Fri, 12 Jun 2015 (14:56 IST)
Updated Date: Fri, 12 Jun 2015 (15:00 IST)
முதன்முறையாக விண்வெளியில் ஆபாச நடிகர்கள் உடலுறவில் ஈடுபடவுள்ளதை வீடியோவாக பதிவு செய்ய உள்ளதாக ‘போர்ன் ஹப்’ என்ற ஆபாசப்பட நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ’மார்ஸ் ஒன்’ என்ற நிறுவனம், செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக மனிதர்களை குடியமர்த்த திட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. இதில், அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆகிய கண்டங்களிலிருந்து 100 பேர் தேர்வு செய்யப்படனர். இந்த பயணப் பட்டியலில் 3 இந்தியர்களும் தேர்வாகியுள்ளனர்.
இந்நிலையில், பூமியில் இருக்கும் அளவிற்கு விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லை என்பதால் அங்கு உடலுறவில் ஈடுபட முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு விஞ்ஞானிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கு ஏதுவாக முதன் முதலாக மனித வரலாற்றில் 2 பேர் விண்வெளியில் வைத்து உடலுறவில் ஈடுபட உள்ளார்கள். ‘போர்ன் ஹப்’ என்ற பட நிறுவனம் ஒன்றே விண் வெளியில் இந்த திட்டத்தை மேற்கொள்ள உள்ளது.
குறித்த படத்தை பூமியின் கீழ் சுற்றுவட்டப் பாதையில் எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு 2016 ஆம் ஆண்டில் ஆரம்பமாகின்றது. இந்தப் படத்திற்கு அதிக முதலீடு வேண்டும் என்பதால் இந்த முதலீடை தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறலாம் என போர்ன் ஹப் நிறுவனம் இந்த திட்டமிட்டுள்ளது.
அதிக நிதி முதலீடு செய்வோருக்கு பரிசு வழங்கவும் இந்த இணையத்தளம் திட்டமிட்டுள்ளது. இந்த படத்திற்கு ஆபாச பட நடிகை ஈவா லோவியா, ஆபாச பட நடிகர் ஜோனி சின்ஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். படப்பிடிப்பு முன்னர் இவர்களுக்கு 6 மாதம் தீவிர பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.