Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2022ஆங்கில புத்தாண்டு பலன்கள் - மேஷம்

Advertiesment
2022ஆங்கில புத்தாண்டு பலன்கள் - மேஷம்
, வெள்ளி, 17 டிசம்பர் 2021 (13:29 IST)
(அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்) - கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி - லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்:
செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷ ராசி அன்பர்களே இந்த ஆண்டு, அவசரமாக எதையும் செய்ய தோன்றும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்.  சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஆனால் வீண்வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏற்ற தாழ்வு பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற் சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை.
 
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள்  திட்டமிட்டு செயலாற்றுவது வளர்ச்சிக்கு உதவும். வாடிக்கையாளர்களிடம்   சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில்  வேகம் காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம்.
 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் தன்மையாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  ஒற்றுமை குறைவு ஏற்படலாம் குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே  விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகளுக்காக செய்யும் வேலைகளில் தடை ஏற்படலாம்.
 
பெண்கள் எந்த காரியத்திலும் அவசரம் காட்ட வேண்டாம். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். 
 
அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். சாதகமான காலமாக அமையும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதிற்க்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும்.
 
கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அதிலும் டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். 
 
மாணவர்கள் எதிர்கால கல்வி தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து  தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், மற்றவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.
 
அஸ்வினி: 
இந்த ஆண்டு நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது.  திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.  பிள்ளைகள்  நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.
 
பரணி:  
இந்த ஆண்டு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைய கூடுதல்  கவனத்துடன்  படிப்பது அவசியம்.
 
கார்த்திகை 1ம் பாதம்:
இந்த ஆண்டு பிரச்சனைகள் மற்றும் விவகாரங்கள் தீர ஆலோசனை செய்து முடிவெடுப்பீர்கள். நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின்  நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான  விஷயங்கள்  சாதகமாக  நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். 
பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.  
 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லட்சுமி கடாட்சத்தை பரிபூரணமாக பெற ஶ்ரீமகாலட்சுமி வழிபாடு !!