சிம்மம்
முன்கோபம், பிடிவாதம் நீங்கும். குடும்பத்தில் இருந்த வந்த மந்த நிலை மாறி உற்சாகம் துளிர்விடும். வரவுக்கு மேல் செலவு இருந்த நிலைமையும் மெல்ல மெல்ல மாறும்.
குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் பிள்ளைகளை சத்தம் போடுவதை குறையுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்களை விட புத்திசாலிகள். தாய், தாய்வழி உறவினர்களுடன் உறவு பலிக்கும். மருத்திவ செலவுகள் காத்திருக்கிறது. கவனம் தேவை.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களிடம் பேசும் போதும் கவனமுடன் பேசவும். தேவையில்லாதவற்றை பேச வேண்டாம்.
தொழில் செய்யும் இடத்தில் தர்க்கம் கூடாது. மேலதிகாரிகள் பளு கொடுக்கலாம். எதையும் செய்யும் திறமை உங்களிடம் இருப்பதை உணருங்கள். பாராட்டுகளும், பரிசுகளும் குவியும்.
கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.
அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.
பெண்களுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனம் தேவை. வாழ்க்கைத்துணைக்கு சந்தேகம் ஏற்படும்படி நடந்து கொள்வதை தவிருங்கள். தந்தையாருடன் தர்க்கம் கூடவே கூடாது. நண்பர்களின் மீது கோபம் கொள்வதையும் தவிர்க்கவும்.
மாணவர்களுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. மிகுந்த நிதானமாக எந்த காரியத்தையும் செய்ய வேண்டும். வார்த்தைகளில் நிதானம் தேவை. தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற முயல வேண்டாம்.