Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செப்டம்பர் மாத ராசிபலன்கள் - ரிஷபம்

செப்டம்பர் மாத ராசிபலன்கள் - ரிஷபம்
, வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (17:17 IST)
ரிஷபம் ராசியினருக்கு செப்டம்பர் மாதத்திற்கான ராசிபலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:         

தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றம்:

15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  சுகஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் சுகஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் பஞ்சமாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் ரிஷப ராசி அன்பர்களே, மிகவும் தெளிவாக முடிவுகளை எடுப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் மற்றவர்களுக்கும் நன்மை அளிக்கக்கூடியதாக இருக்கும். தெய்வ அனுகூலம் நிறைந்ததாகவும் இருக்கும். உங்கள் குடும்பத்தில் பெரியவர்களின் ஆசையை நிறைவேற்றி அவர்களின் மனம் குளிரும்படி நடந்து கொள்ள முற்படுவீர்கள்.

குடும்பத்தில் அவ்வப்போது கணவன் - மனைவிக்கிடையே சிறு சிறு பூசல்கள் வந்து கொண்டிருக்கும். சிலருக்கு அடி வயிற்றுவலி ஏற்படும். எனவே உடல்நலனில் அக்கறை செலுத்தி மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. புதிய வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்குவதற்கு முயற்சி செய்வீர்கள்.

தொழிலில் ஏற்பட்ட தடங்கல்களை களைந்து  விடுவீர்கள். தொழில் துறையினருக்கு கடின உழைப்பு ஏற்படக் கூடும். அதனால் உடலும், சோர்வு அடைந்து விடும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க வில்லையே என மனம் நினைக்கும். புதிய முயற்சிகளை இப்போது ஆரம்பிக்கலாம்.

உத்தியோகஸ்தர்கள் வேலைபார்த்து வரும் இடத்தில் மேலதிகாரியிடமோ, அல்லது சக ஊழியரிடமோ கோபப் பட்டு பேசுவதை தவிர்க்கவும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. உங்களுடைய பொருட்களை பாதுகாப்பாக  வைத்திருப்பது நல்லது.

பெண்கள் எதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி வரும். எதிர்பாராமல் பயணத்தில் தடை ஏற்படலாம்.

மாணவர்கள் சோம்பேறித்தனம் அதிகமாகலாம். கல்வியில் அதிக கவனம் தேவை.

அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள்  சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். சூரியன் சஞ்சாரம் அனுகூலமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும்.

கலைத்துறையினர் திட்டமிட்டு காரியங்களை செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்களது செயல்களுக்கு ஆதரவு கிடைக்கும்.

கார்த்திகை 2, 3, 4

இந்த மாதம் மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். தந்தை, தந்தை வழி உறவினர்கள் வழியே பிரச்சனைகள் வரலாம். நண்பர்கள் இடத்தில் மனக்கிலேசம் ஏற்படும்.

ரோகிணி 1, 2, 3, 4                                                         

இந்த மாதம் செய்யும் வேலையில் உங்கள் தனித் தன்மை வெளிப்படும். காரியங்களை செம்மையாக முடித்து வெற்றிகளைப் பெறுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

மிருக சீரிஷம் 1, 2

இந்த மாதம் எதிர்காலத்திற்கு தேவையான முறையான சேமிப்புகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். தொழில்,  வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். 

சந்திராஷ்டம தினங்கள்: 18, 19

அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – சனி

பரிகாரம்: அருகிலுள்ள சிவாலயத்திற்கு சென்று பைரவரை வணங்கவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செப்டம்பர் மாத ராசிபலன்கள் - மேஷம்