Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்டோபர் 2022 மாத ஜோதிடப் பலன்கள்: மிதுனம்

Advertiesment
அக்டோபர் 2022 மாத ஜோதிடப் பலன்கள்: மிதுனம்
, சனி, 1 அக்டோபர் 2022 (11:44 IST)
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்  திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)


கிரகநிலை:
தைரிய வீர்ய ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் ராகு - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:
இம்மாதம் 03ம் தேதி புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 9ம் தேதி செவ்வாய் பகவான் ராசிக்கு மாறுகிறார்.
இம்மாதம் 18ம் தேதி சூர்யன் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 20ம் தேதி சுக்கிர பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 23ம் தேதி புதன் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
யானையை பூனையாக்குவதும், பூனையை யானை ஆக்குவதும்  என்பது போல எந்த விஷயத்திலும் சின்னதை பெரியதாகவும், பெரியதை சிறியதாகவும் மாற்றும் கலையை அறிந்த மிதுன ராசியினரே இந்த மாதம் தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சலை தரும்.  உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும்.

குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும்.  உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகளை அதிகரிக்கலாம். பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டி வரலாம்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும்.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள்.

மிருகசீர்ஷம்:
இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும்.  எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

திருவாதிரை:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை  செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.

புனர்பூசம்:
இந்த மாதம் கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன்  பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 6
அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபர் 2022 மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்