Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: மிதுனம்

Advertiesment
நவம்பர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்:  மிதுனம்
, திங்கள், 1 நவம்பர் 2021 (14:48 IST)
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

 
கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - ரண் ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலவரம் உள்ளது.
 
கிரகமாற்றம்:
13-11-2021 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
எதையும் ஆராய்ந்து பார்த்து அதில் இருக்கும் சாதகபாதகங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படும் மிதுனராசியினரே, இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம்  நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும்.
 
தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் விரிவாக் கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர் பார்த்த பணவரத்து கிடைக்க பெறுவார் கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.
 
குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடல் ஆரோக்யம் அடையும் சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர் கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.
 
பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். பயணம் செல்ல நேரலாம்.
 
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.
 
பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்ச நேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனோ தைரியம் கூடும்.
சந்திராஷ்டம தினங்கள்: 10, 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவம்பர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்