Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் மாத ராசி பலன்கள் 2023 - மேஷம்

Advertiesment
நவம்பர் மாத ராசி பலன்கள் 2023 - மேஷம்
, புதன், 1 நவம்பர் 2023 (07:07 IST)
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:
ராசியில் குரு(வ) - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் - தொழில் ஸ்தானத்தில் சனி - விரைய ஸ்தானத்தில் ராகு  என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்:
1ம் தேதி புதன் பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
2ம் தேதி சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17ம் தேதி சூர்யன் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17ம் தேதி செவ்வாய் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30ம் தேதி சுக்கிரன் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண்குழப்பம் ஏற்படும். எனவே எதைப்பற்றியும்  அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பண வரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக  பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. இல்லையெனில் வீணான அவசொல் வாங்க நேரிடும்.

தொழில் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது அவை போய் சேர்ந்தனவா என்று கண்காணிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளிடம் நிதானமாக பேசுவது நல்லது. பெண்கள் எதைபற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வரவும் செலவும் சரியாக இருக்கும்.

கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில்  செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை.  முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.

அரசியல் துறையினர் வளர்ச்சி பெற மிகவும்  கவனமாக  இருப்பது நல்லது. செலவை  குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மனமகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.

மாணவர்கள் கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை  நன்கு படிப்பது நல்லது.
பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறும் விரதம் இருந்து முருகனை கந்தசஷ்டி படித்து வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலை தவிர்க்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு? இன்றைய ராசிபலன் (01-11-2023)!