Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மே மாத ஜோதிட பலன்கள் 2021: மேஷம்

Advertiesment
மே மாத ஜோதிட பலன்கள் 2021: மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) - கிரகநிலை: ராசியில் சூர்யன், சுக்ரன் - தன ஸ்தானத்தில் புதன், ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் குரு (அதி. சா) என கிரக நிலவரம் உள்ளது.

பலன்:
 
வாழ்க்கையை குறிக்கோளுடன் நடத்தி வெற்றி காணும் மேஷ ராசியினரே இந்த மாதம் மனதிடம் அதிகரிக்கும். அதே வேளையில் அஷ்டமத்து சனி விலகுவதன்  மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கை கூடி வரும்.  தனாதிபதி சுக்கிரன் ராசிநாதன் சஞ்சாரத்தால் பணவரவு நன்றாக இருக்கும். 
 
தொழில் வியாபாரம் ஏற்றம் தரும் வகையில் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து  செல்வது நல்லது. பெண்களுக்கு எதைபற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வரவும் செலவும் சரியாக இருக்கும்.
 
கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது  நல்லது.  
 
அரசியல் துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், மாணவர்களுக்கு கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை  நன்கு படிப்பது நல்லது.
 
அஸ்வினி:
இந்த மாதம் தங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே நீங்கள் எடுத்த காரியங்கள் முடியும். வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும்போது தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது.
 
பரணி:
இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை  சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.   பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.
 
கார்த்திகை:
இந்த மாதம் மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்டநாட்களாக  இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
 
பரிகாரம்:  செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து கந்தர்சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (30-04-2021)!