Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மார்ச் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்

மார்ச் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்
, ஞாயிறு, 1 மார்ச் 2020 (14:41 IST)
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)


கிரகநிலை:
குடும்ப ஸ்தானத்தில் ராஹூ -  அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி, கேது  -  பாக்கிய ஸ்தானத்தில் புதன் (வ) - தொழில் ஸ்தானத்தில்  சூர்யன் -  லாப ஸ்தானத்தில்  சுக்ரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-03-2020 அன்று மாலை 6.59 மணிக்கு செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-03-2020 அன்று காலை 4.20 மணிக்கு  குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-03-2020 அன்று மாலை 3.26 மணிக்கு சனி பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
29-03-2020 அன்று காலை 6.16 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:
வெளுத்தது எல்லாம் பால் என்று நினைக்கும் வெள்ளை உள்ளம் கொண்ட ரிஷப ராசியினரே  இந்த மாதம் காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும்.

தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள்.

உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான  பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம். சிறு பிரச்சனையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டிய காலகட்டமிது.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:
அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவி ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும்.

ரோகிணி:
பிள்ளைகள்  நலனுக்காக செலவுகள்  செய்ய வேண்டி இருக்கும். எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. கணவனின் உடல்நலத்தில் கவனம் தேவை. 

மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள். உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12,

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மார்ச் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்