Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்மம் - கார்த்திகை மாத பலன்கள்

Advertiesment
சிம்மம் - கார்த்திகை மாத பலன்கள்
, வெள்ளி, 16 நவம்பர் 2018 (12:33 IST)
கிரகநிலை: தைரிய வீரிய  ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன் (வ) -  சுக ஸ்தானத்தில் சூர்யன், குரு -  பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானத்தில்  சனி -  சுக ஸ்தானத்தில் கேது -  களத்திர  ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள்  வலம் வருகின்றன.
பலன்: மற்றவர்கள் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிணக்க நிலை மாறும். முன்கோபம், பிடிவாதம் நீங்கும். குடும்பத்தில் இருந்த வந்த மந்த நிலை மாறி உற்சாகம் துளிர்விடும். வரவுக்கு மேல் செலவு  இருந்த நிலைமையும் மெல்ல மெல்ல மாறும்.
 
குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் பிள்ளைகளை சத்தம் போடுவதை குறையுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்களை விட புத்திசாலிகள். தாய், தாய்வழி உறவினர்களுடன் உறவு பலிக்கும். மருத்திவ செலவுகள் காத்திருக்கிறது. கவனம் தேவை.
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களிடம் பேசும் போதும் கவனமுடன் பேசவும். தேவையில்லாதவற்றை பேச வேண்டாம்.
 
தொழில் செய்யும் இடத்தில் தர்க்கம் கூடாது. மேலதிகாரிகள் பளு கொடுக்கலாம். எதையும் செய்யும் திறமை உங்களிடம் இருப்பதை  உணருங்கள். பாராட்டுகளும், பரிசுகளும் குவியும்.
 
கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக  அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.
 
அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.
 
பெண்களுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனம் தேவை. வாழ்க்கைத்துணைக்கு சந்தேகம் ஏற்படும்படி நடந்து கொள்வதை தவிருங்கள். தந்தையாருடன் தர்க்கம் கூடவே கூடாது. நண்பர்களின் மீது கோபம் கொள்வதையும் தவிர்க்கவும்.
 
மாணவர்களுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. மிகுந்த நிதானமாக எந்த காரியத்தையும் செய்ய வேண்டும். வார்த்தைகளில் நிதானம்  தேவை. தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற முயல வேண்டாம்.
 
மகம்: இந்த மாதம் வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள்  செல்ல வேண்டி இருக்கும்.
 
பூரம்: இந்த மாதம் கவன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும். தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும்.  எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். சிக்கன நடவடிக்கை கைகொடுக்கும்.
 
உத்திரம் 1ம் பாதம்: இந்த மாதம் அரசாங்கம்  தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். மாணவர்களுக்கு நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன்  பாடங்களை படிப்பது நல்லது.
 
பரிகாரம்: சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்
 
அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 8, 9, 10
 
சந்திராஷ்டம தினங்கள்:  நவம்பர் 19, 20.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடகம் - கார்த்திகை மாத பலன்கள்