Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோதிடம்

மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) - பலன்: பொருள் தேடும் வழியில் அருளையும் நாடிச் செயல்படும் எண்ணம் நிறைந்த மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் சுபபலன்கள் மிகுதியாக நடைபெற வாய்ப்பு உள்ளது. கறாரான செயல்பாடுகளால் மட்டுமே பொருளாதார வரவுகளை பெற முடியும். இல்லையால் பலரது பரிகாசத்திற்கு ஆளாக நேரிடும். இப்பொழுது உள்ள கிரகநிலையில் சாந்தகுணம் பாதியும், உக்கிர குணம் பாதியுமாக கலந்திருக்கும். சூழ்நிலகளிக்கேற்ப எதை பயன்படுத்தினால் வெற்றி என்பதை உணர்ந்து செயலாற்றி தக்க புகழைப் பெறுங்கள். பெண்கள் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள், பிறரது குறுக்கீடு எதுவுமின்றி சுயமான சிந்தனையுடன் செயல்பட்டு அதிகாரிகளிடத்தில் நற்பெயர் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது முழுக்கவனம் படிப்பில் ஏற்படும். கலை, இசை, பரத நாட்டியம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வெற்றியை ஈட்டுவார்கள். தக்க சன்மானமும், புகழும் உண்டு. உத்திராடம் 2, 3, 4 பாதம்: இந்த மாதம் பிடித்தமான ஒருவரை சந்திக்க நேரலாம். அதனால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். சக பாகஸ்தர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கூடியவரை வீண் விவாதங்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது. திருவோணம்: இந்த மாதம் சிக்கனமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பண உதவி எதையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் கிடைப்பதற்கான சாத்தியக் கூறு அதிகம் உள்ளது. அவிட்டம் 1,2 பாதம்: இந்த மாதம் பிள்ளைகள் விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்படலாம். விரக்தி மனப் பான்மையை விட்டொழியுங்கள். பரிகாரம்: அக்னி வீரபத்திரர், அகோர வீர பத்திரர் ஆகிய தெய்வங்களுக்கு வெண்ணெய் சார்த்தி வழிபடுவதால் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - சனி சந்திராஷ்டம தினங்கள்: 23, ,24 அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17, 18