Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவரத்தினக் கற்கள் கொண்ட மோதிரத்தை அனைவரும் அணியலாமா?

Advertiesment
நவரத்தினக் கல்
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

ஜோதிடத்தில் 9ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் செவ்வாய். அதேபோல் இரத்தினக் கற்களுக்கு உரிய கிரகம் சுக்கிரன். எனவே, ஜாதகத்தில் செவ்வாயும், சுக்கிரனும் நன்றாக இருப்பவர்கள் மட்டுமே நவரத்தினக் கற்கள் பதித்த மோதிரத்தை அணிய வேண்டும்.

இந்த 2 கிரகங்களில் ஏதாவது ஒன்று கெட்டுப்போய் இருந்தாலும் நவரத்தினக் கல் மோதிரத்தை அணிவதை அவர்கள் தவிர்த்து விட வேண்டும்.

இதேபோல் ஓப்பன் செட்டிங் உள்ள நவரத்தினக் கல் மோதிரத்தை அணியக் கூடாது. அது போன்ற அமைப்பு கொண்ட மோதிரத்தை அணிவதன் மூலம் தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படும்.

சமீபத்தில் என்னிடம் வந்த தம்பதிகளில், கணவரின் ஜாதகத்தைப் பார்த்த போது மிகச் சிறப்பாக இருந்தது. அதனை அவரிடம் கூறிய போது, அவர் நேர்மாறாக பதிலளித்தார். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அடிக்கடி ஏற்படுவதாகவும், அடுத்தடுத்து உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசியதில் சமீபத்தில்தான் அவர் நவரத்தினக் கல் மோதிரம் அணிந்து கொண்டதை அவரது மனைவி தெரியப்படுத்தினார். அந்த மோதிரம் ஓப்பன் செட்டிங் கொண்டது. மீண்டும் ஜாதகத்தை அலசியதில் செவ்வாய் நீச்சமாகி சனியுடன் சேர்ந்து கடகத்தில் அமர்ந்திருந்தது. அதுமட்டுமின்றி சுக்கிரனும், சூரியனுடன் இணைந்து பலவீனமாகி இருந்தது.

இதையடுத்து நவரத்தின மோதிரத்தை கழட்டி விடுங்கள் என்று கூறினேன். இதைக் கேட்ட அவரது மனைவி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். காரணத்தைக் கேட்ட போது, அந்த மோதிரத்தை கணவர் அணிந்த நாள் முதல் வீட்டில் சண்டை, சச்சரவுகள் அதிகமாகி விட்டதாகவும், திருமணம் முடிந்து பல ஆண்டு கால வாழ்க்கையில் தன்னை கை நீட்டி அடிக்காதவர், மோதிரம் அணிந்த சில மாதங்களுக்கு உள்ளாகவே தன்னை நான்கைந்து முறை அடித்து விட்டதாக வருத்தத்துடன் கூறினார்.

இதன் பின்னர் பேசிய அவரது கணவர், மோதிரம் போட்டதற்கு பின்னர் தனது ரத்த அழுத்தம் அபரிமிதமாக உயர்ந்து விட்டதாகவும், தொடர்ந்து உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்சனையெல்லாம் நவரத்தினக் கல் மோதிரம் அணிந்ததால் வந்ததே என்று அவர்கள் இருவரிடமும் விளக்கிக் கூறிய நான், மீண்டும் அதுபோன்ற மோதிரங்களை அணியாதீர்கள் என்று அறிவுறுத்தி அனுப்பினேன்.

எனவே, செவ்வாய், சுக்கிரன் வலுவாக இல்லாதவர்கள் நவரத்தினக் கல் மோதிரத்தை அணிவதை தவிர்த்து விட வேண்டும். செவ்வாய், சுக்கிரன் வலிமையாக உள்ளவர்கள் கூட ஓப்பன் செட்டிங் மோதிரத்தை அணியக் கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil