Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும், ஸ்தலங்கள் செல்வது சால சிறந்தது! - இன்றைய ராசி பலன்கள் (02.02.2025)!

Advertiesment
astro

Prasanth Karthick

, ஞாயிறு, 2 பிப்ரவரி 2025 (06:01 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
மேஷம்:
இன்று உங்களின் சேமிப்புகளில் கை வைக்க வேண்டி வரலாம். கவனம் தேவை. எனவே அதை முடிந்த வரை தவிர்க்கவும். விவசாயிகள் சிறப்புடன் இருப்பார்கள். நெல் கோதுமை போன்ற பயிர்கள் லாபம் தரும். விவசாயத்திற்குத் தேவையான புதிய கருவிகளை வாங்குவதற்கு அரசின் மானியம் உங்களுக்குக் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

 
ரிஷபம்:
இன்று பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். வேலையின்றி தவிக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு கடந்த காலத்தை விட சிறப்பான லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

 
மிதுனம்:
இன்று அரசியல் துறையினருக்கு நல்ல பெயர் வாங்குவீர்கள். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். மாணவர்களுக்கு  மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப் பெண் பெற முயற்சி செய்வீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கடகம்:
இன்று தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து  சேருவார்கள். கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

சிம்மம்:
இன்று அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

கன்னி:
இன்று அறிமுக இல்லாதவர்களிடம் வரவு, செலவு வைத்துக் கொள்ள வேண்டாம். பழைய பாக்கி வசூல் ஆகும். வேறு பல உபதொழில்களும் இந்த நேரத்தில் ஆரம்பிக்கலாம். உடன்பிறந்தவர்களால் உதவிகள் வந்து சேரும். முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

 
துலாம்:
இன்று உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் காண்பார்கள். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

விருச்சிகம்:
இன்று வீண்செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வர வேண்டிய பணம் வந்துசேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9   

 
தனுசு:
இன்று உங்களுக்கு வரும் தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். வேலை நிமித்தமாக குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இதே இடத்திற்கு வந்து சேருவார்கள்.  திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

 
மகரம்:
இன்று குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களால் மூலம் பாசம் அன்பு பெறுவீர்கள். அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நிலம் வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்கி விற்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அழகிய பெரிய வீடும் மற்றும் விலை உயர்ந்த வாகனமும் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். செல்வாக்கு உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

 
கும்பம்:
இன்று முயற்சி செய்த அளவுக்கு வெற்றி, ஆனால் நினைத்த இடத்திற்கு வரத்தடைகள் என அனைத்தும் இனி மாறும். முயற்சிகளை இருமடங்காக்குங்கள், வெற்றிகள் உங்களைத் தேடி வரும் நேரமிது. உங்கள் பொன்னான நேரத்தை அடுத்தவருக்காக வீணாக்காதீர்கள். அடுத்தவரை பற்றி பேசாவிட்டாலும் நீங்கள் கூறியதாக சிலர் பற்ற வைக்க கூடும். கவனம் தேவை. யாரையும் முழுமையாக நம்பவேண்டாம். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை முடிந்த வரை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம்:
இன்று பணி செய்யும் இடத்தினில் எச்சரிக்கை தேவை. சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாடு அயலூர் செல்ல வேண்டி வரலாம். லாபகரமான முதலீடுகள் செய்ய தயங்க வேண்டாம். எந்த முதலீடுகளையுமே குறுகிய காலம் செய்யாமல் நீண்ட காலமாக செய்யுங்கள். தாய் தந்தையரை வணங்கி எந்த காரியத்தையும் ஆரம்பித்தால் வெற்றியே.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

11 பெருமாள்கள் ஒருசேர எழுந்தருளிய கருடசேவை உற்சவம்: திருநாங்கூரில் திருவிழா..!