Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (01-07-2022)!

Advertiesment
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (01-07-2022)!
, வெள்ளி, 1 ஜூலை 2022 (06:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று நல்ல அறிவாற்றலும் பேச்சாற்றலும் மிளிரும். அனைவரிடமும் அன்பாகப் பழகுவீர்கள். உங்களின் உடல் ஆரோக்கியமானது சுறுசுறுப்புடன் அமைந்து எல்லா பணிகளையும் திறம்படச் செய்து முடிப்பீர்கள். சிறுசிறு இடையூறுகளைச் சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து வெற்றி நடைபோடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9 

ரிஷபம்:
இன்று தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். மறைமுக எதிர்ப்புகள் யாவும் இருந்த இடம் தெரியாமல் ஒடும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கப் பெற்று அவர்களின் திறமைகளும் வெளிப்படும். குடும்பத்தில் சுபிட்சம், மகிழ்ச்சி, எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5 

மிதுனம்:
இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் அமைப்பு, உங்களுக்கு இருந்து வந்த வம்பு, வழக்குகள் யாவும் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். நீண்ட நாட்களாக நீங்கள் கண்ட கனவுகள் கூட அனைத்தும் நினைவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் நடைபெறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்:
இன்று கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை, வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் போன்ற யாவும் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சியில் சில இடையுறுகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

சிம்மம்:
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் அவை சுப செலவுகளாகவே இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலை இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உடல் நிலை மிகவும் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9 

கன்னி:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களும் நலமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலையும், மகிழ்ச்சியும் நிலவும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

துலாம்:
இன்று விரோதிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பண வரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும். திருமண சுப காரியங்களும் நடைபெறும். சிலர் நினைத்தவரையே கைபிடித்து மகிழ்வர். பொன், பொருள், ஆடை, அபரண சேர்க்கைகளும் அதிகரிக்கும். கடன்கள் குறையும். புதிய மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6 

விருச்சிகம்:
இன்று பணிபுரிபவர்கள் எதிர்பாராத வகையில் கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். இட மாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருந்தவர்களும் குடும்பத்தோடு சேருவதற்கான இட மாற்றம் கிடைக்கும். ஊதிய உயர்வுகளும் நிலுவைத் தொகைகளும் தடையின்றிக் கிடைக்கும். பொருளாதார நிலையும் உயர்வடையும். உடன் பணிபுரிவர்களின்; ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

தனுசு:
இன்று தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த நல்ல லாபத்தினைப் பெற முடியும். புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும், நல்ல லாபம் கிட்டும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளிடையே இருந்து கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7 

மகரம்:
இன்று வேலையாட்களின் ஒத்துழைப்புடன் மகிழ்ச்சியினை உண்டாக்குவதோடு அபிவிருத்தியையும் பெற முடியும். புதிய நவீன கருவிகளையும் வாங்கி சேர்க்க முடியும். பெண்களுக்கு நினைத்த காரியங்களை நிறைவேற்றக் கூடிய பொற்காலமாக அமையும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7 

கும்பம்:
இன்று பொன், பொருள், சேர்க்கைகளும் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் தடபுடலாக நடைபெறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகளும் பூர்த்தியாகும். பணியில் உயர்பதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

மீனம்:
இன்று கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தினை பெற முடியும். அரசியல்வாதிகள் மக்களின் அமோகமான ஆதரவினைப் பெற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சப்த தேவியர்களை வழிபட உகந்த ஆஷாட நவராத்திரி !!