Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (18-03-2022)!

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (18-03-2022)!
, வெள்ளி, 18 மார்ச் 2022 (06:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
 
மேஷம்:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட நிறம்: 4, 6
 
ரிஷபம்:
இன்று குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட நிறம்: 3, 5
 
மிதுனம்:
இன்று பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாக்கு வாதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பணியாளர்களிடம் கவனமுடம் பேசுவது நல்லது.
அதிர்ஷ்ட எண்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட நிறம்: 2, 6
 
கடகம்:
இன்று சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும். உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அவை மளமளவென்று நடந்தேறும்.
அதிர்ஷ்ட எண்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட நிறம்: 1, 5, 6
 
சிம்மம்:
இன்று தொழில் வியாபாரத்தில் கூட்டுத் தொழில் செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆவணங்கள் அனைத்தையும் ஒரு முறைக்கு இருமுறை வாசித்து வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. சக பணியாளர்களின் வேலைகளில் உங்கள் உதவி தேவைப்படும் சூழல் உருவாகலாம்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட நிறம்: 3, 5, 9
 
கன்னி:
இன்று தொழிலில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள்.
அதிர்ஷ்ட எண்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட நிறம்: 6, 9
 
துலாம்:
இன்று உயர் பதவிகள் கிடைக்க கூடும். இருப்பினும் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியதிருக்கும். அதீத உழைப்பு செய்ய வேண்டியதிருக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். எதிலும் கருத்து சொல்லும் முன் யோசித்து சொல்வது சிறப்பு. குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது.
அதிர்ஷ்ட எண்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 3, 9
 
விருச்சிகம்:
இன்று குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்க வழிவகை நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது
அதிர்ஷ்ட எண்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட நிறம்: 1, 6
 
தனுசு:
இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும் திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். இரவு நீண்ட நேரம் முழிக்க வேண்டியதிருக்கும்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள்
அதிர்ஷ்ட நிறம்: 5, 6
 
மகரம்:
இன்று சீரான பலனை காண்பீர்கள். பதவிகள் வந்து சேரும். விடாமுயற்சியுடன் உழைப்பது நல்லது. அதிகமாக தூரம் செல்ல வேண்டியதிருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து நற்பலனை பெறலாம். கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கை தேவை. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மன திருப்தியை தரும்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட நிறம்: 4, 6
 
கும்பம்:
இன்று மனதில் தைரியம் அதிகரிக்கும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மன குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.
அதிர்ஷ்ட எண்: நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 2, 9
 
மீனம்:
இன்று பங்குதாரர்களிடம் யதார்த்த நிலையை கடைபிடிக்கவும். எந்தவொரு விஷயத்திலும் ஆராய்ந்து முடிவெடுக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். மிக கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.
அதிர்ஷ்ட எண்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட நிறம்: 1, 5

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பங்குனி உத்தரம் எந்த தெய்வத்திற்குரிய சிறப்பு தினம் தெரியுமா...?