Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது....?

Advertiesment
white discharge
, திங்கள், 9 மே 2022 (09:39 IST)
சில பெண்களுக்கு உடல்சூடு அதிகமாக இருக்கும். டென்ஷன், ஒற்றைத் தலைவலி, பதற்றம், அதிக கோபம் இப்படியான அறிகுறிகள் இருக்கும். இவர்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை அடிக்கடி வரும்.


ஒரே நாளில் 2 இளநீர் குடிக்கலாம். அதிகமான காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுவதால் வெள்ளைப்படுதல் நிற்கும்.

ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் அவசியம். நம் உடலில் நீர்ச்சத்து நிறைந்ததாக இருந்தாலே எல்லாக் கிருமியும் ஃப்ளஷ் அவுட்டாகி வெளியே வந்துவிடும். அந்த அளவுக்கு தண்ணீருக்கு கிருமிகளை நீக்கும் சக்தி உண்டு.

மலம் கழித்து முடித்த பின், கழுவும்போது முன்னே இருந்து பின் எனக் கழுவ வேண்டும். பின்னிருந்து முன்னாக கழுவினால் கிருமிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். துர்நாற்றம்,  அரிப்பு, வெள்ளை படுதல் பிரச்சனை அதிகமாக இருக்கும். திரும்பத் திரும்ப வரும். இந்த முன்னிருந்து பின் கழுவும் பழக்கம் மிக மிக முக்கியம். இல்லையெனில் திரும்ப திரும்ப வெள்ளைப்படுதல், சிறுநீர் தொற்று போன்றவை ஏற்படும். எந்த மருத்துவம் எடுத்தாலும் சரியாகாது.

ஒரு நாளைக்கு 2-3 ஸ்பூன் அளவுக்கு ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆலிவ் எண்னெய்யில் ஆன்டி-லுக்கோரியா தன்மை உள்ளதால் வெள்ளைப்படுதல் பிரச்னையை தீர்க்கும்.

தினமும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வந்தால் 48 நாட்களிலே முழுமையான குணம் கிடைக்கும். ஆன்டி-இன்ஃப்ளேமட்டரி, ஆன்டி-ஆக்சிடேட்டிவ் தன்மை இருப்பதால் நெல்லிக்காய் வெள்ளைப்படுதல் பிரச்சனையை குணப்படுத்தும்.

கர்ப்பப்பையை வலுவாக்குவதில் முதல் மருந்து, கற்றாழைதான். வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு, பிசிஓடி, சிஸ்ட், கர்ப்பப்பை புற்றுநோய் என எந்த கர்ப்பப்பை தொடர்பான மருந்துக்கும் கற்றாழை ஜூஸ்தான் சிறந்தது. 48 நாளைக்கு வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் எடுத்து, அதில் கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெல்ல குறைந்த கொரோனா, 3,207 தினசரி பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!