Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விபரீத கரணி ஆசனம்

Advertiesment
விபரீத கரணி ஆசனம்
வடமொழியில் "விபரீத" என்றால் தலைகீழ் என்று பொருள். கரணி என்றால் செயல். இந்த ஆசனத்தில் உடல் தலைகீழ் நிலையில் இருக்கும்.

செய்முறை :

1. விரிப்பின் மீது 3 அல்லது 4 இலவம் பஞ்சு தலையணைகளை அடுக்கி வைக்கவும்.

2. தலையணையின் மீது மையத்தில் அமராமல் முன்பகுதி நுனிக்கும் மையப்பகுதியின் இடையில் அமரவும்.

3. மெதுவாக பின்னால் வளைந்து கைகளை தரையில் வைத்து ஊன்றிப் படுத்து உச்சந்தலையை விரிப்பின் மீது வைக்கவும்.

4. கால்களை ஒன்று சேர்த்து மேலே உயர்த்தவும். அதே சமயத்தில் தலையை நகர்த்தி தோள் பட்டைகளை விரிப்பின் மீது வைக்கவும்.

5. கால்களை 90 டிகிரிக்கு நீட்டிக் கொண்டு வரவும். உடல் கனம் முழுவதும் தோள்பட்டை கழுத்தில் இருக்கும்படி வைக்கவும். கைகளை சாதாரணமாக தலையணைக்கு பக்கத்தில் வைக்கவும்.

WD
6. சாதாரண மூச்சில் 100 எண்ணிக்கை இருக்கவும். முடிந்ததும் கால்களை கீழே கொண்டு வந்து தரையில் வைக்கவும். சிறிது ஓய்வு எடுக்கவும்.

7. மெதுவாக முதுகை விரிப்பின் மீது வைத்து கால்களை நீட்டி சவாசனத்திற்கு வரவும்.

பலன்கள் :

தைராய்டு சுரப்பியின் அதிக ரத்தம் பாய்வதால் தைராக்ஸின் போதுமான அளவு சுரந்து இரத்தத்தில் கலக்கிறது. புவிஈர்ப்பு சக்தியால் தலையில் இருக்கும் பீனியல் பிட்யூட்டரி சுரப்பிகளும் பிட்யூட்டரின்ங் எனும் மருந்தும் என்ன வேலை செய்யுமோ அதை இந்த ஆசனம் செய்து விடுகிறது. முதுகுத் தண்டின் மையத்திலுள்ள ஒரு விதத் திரவம் இந்த ஆசனத்தால் அதிக வேகமடைகிறது. அதனால் மெடுல்லா பாகத்தில் வந்து முடியும் சிம்பதடிக் நரம்புகளும், வேகஸ் நரம்புகளும் சுறுசுறுப்படைகின்றன.

அட்ரீனல் சுரப்பியில் தலைகீழ் நிலையில் வயிற்றில் அழுத்தம் ஏற்படுவதால் அதன் ஹார்மோன் அதிகமாக இரத்தத்தில் கலக்கிறது. எனவே அட்ரீனலின் மருந்தின் வேலை இயற்கையாக நடைபெறுகிறது. பிராணவாயு சூட்டினால் நுரையீரல்களிலுள்ள காற்றுக் குழாயின் இறுக்கம் தளர்த்தப்படுகிறது.

அதிக இரத்தத்தை இதயத்திற்கு அனுப்புகிறது. அதனால் அசுத்த இரத்தம் சுத்தம் அடைகிறது. முகத்தில் பொலிவு ஏற்படும். தலை சுற்றல், தலைவலி, கருப்பை ஏறுதல் அல்லது இறங்கிய நிலை அடிமுதுகு வலி, கழுத்துவலி, முதுகுத்தண்டு கோளாறு, அஜீரணத்தை போக்கி செரிமானத்தையும், கால் வீக்கம், ஆரம்பநிலை யானைக்கால் வியாதி ஆகியவற்றை சரி செய்கிறது.

கட்டி, முகப்பரு, முகத்தின் சுருக்கங்கள், இளநரை, எக்ஸிமா என்னும் தோல் நோய்கள் ஆகியவற்றை வராமல் தடுக்கிறது. நரம்பு மண்டலம், மூளை மண்டலம், ஐம்புலன்கள் ஆகியவற்றைப் பலப்படுத்துகிறது. இரத்தமின்மை, பற்கள் ஆட்டம் ஆகியவற்றை போக்குகிறது. தொடர்ந்து மற்ற ஆசனங்கள், பிராணயாமம், கிரியை பயிற்சிகளுடன் இவ்வாசனத்தை செய்து வந்தால் ஆஸ்துமா, இருமல், மார்பு சளி, ஜலதோஷம், டி.பி., மூக்கடைப்பு, சைனஸ், அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு ஆகிய நோய்கள் குணமடைகிறது.

எச்சரிக்கை:

90 டிகிரி நிலையை அடைந்த பின் கால்களை தள்ளாதீர்கள். அதேபோல் முழங்காள்களை மடக்குவதும் கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil