பவன முக்தாசனம் என்ற வடமொழிச் சொல் 3 கூட்டுச் சொற்களால் ஆனது. பவனம் என்றால் காற்று அல்லது வாயு, முக்தா என்பது விடுவிப்பு; ஆசனம் என்பது யோக நிலை. எனவே இது வாயு விடுவிப்பு ஆசனம் என்று அழைக்கப்படுகிறது. இதை பயிற்சி செய்யும் ஒருவர் சீரண உறுப்புகளை மசாஜ் செய்வதோடு, வயிறு மற்றும் குடல்களில் உள்ள தேவையற்ற வாயுவை வெளியேற்றுகின்றனர்.
செய்முறை : 1
மல்லாந்து படுத்துக் கொள்ளவும்.
பக்கவாட்டில் கைகள் நீட்டியிருக்கப்படவேண்டும்.
உள்ளங்கைகள் கீழ் நோக்கி, புறங்கைகள் மேலே இருக்குமாறு வைத்துக் கொள்ளவேன்டும்.
மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக விடவும்.
மூச்சுக்காற்றை வெளியே விடும்போது கீழ்வருமாறு செய்யவும்.
இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து உயர்த்தி மடித்து வயிற்றின் மீது கொண்டு வரவும். கை விரல்களை ஒன்று சேர்த்து அல்லது தனித் தனியாக கால் முட்டிகளை பிடித்து வயிற்றில் அழுத்தம் கொடுக்கவும். தலையை உயர்த்தி முக வாய் கட்டையை இரண்டு முட்டிகளுக்கு இடையில் கொண்டு வந்து வைக்க வேண்டும்.சாதாரண மூச்சில் 15 எண்ணிக்கை இருந்து விட்டு கால்களையும் தலையையும் பிரித்து மல்லாந்து படுத்து ஓய்வு எடுக்க வேண்டும்.மூன்று முறை செய்துவிட்டு சவாசனத்திற்கு வர வேண்டும். பலன்கள் :அல்சர், வயிற்று புற்று நோய்க்கு சிறந்த ஆசனம். மாரடைப்பு நோய், குடல் வால்வுக் கோளாறுகள், மூட்டு வலி பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் சரியாகி விடும். மலச்சிக்கல், செரியாமை சீரடையும். பிரசவித்த பெண்களின் அடி வயிற்றில் பெருக்கம் குறையும். குறிப்பு : சாதாரண மூச்சில் செய்து பழகவும். ஆஸ்துமா உள்ளவர்கள் மெதுவாக பழகவும். வயிற்றில் அழுத்தம் குறைவாக கொடுக்கவும்.