Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யோகாசங்களை முறையாக பயில்வதால் இத்தனை நன்மைகளா !!

Advertiesment
யோகாசங்களை முறையாக பயில்வதால் இத்தனை நன்மைகளா !!
, திங்கள், 27 ஜூன் 2022 (17:12 IST)
யோகாசனம் செய்வதால் ஆயுளையும் நீட்டிக்கிறது. மன அழுத்தம், பயம் மற்றும் படபடப்பிலிருந்து விடுவிக்கிறது. நாட்பட்ட நோய்களான ஒவ்வாமை, தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம், உடற்பருமன், சர்க்கரை நோய் முதுகுவலி போன்றவற்றிற்கு சிறந்த பலனளிக்கிறது. உள்நிலையில் அமைதி, ஆனந்தம் மற்றும் நிறைவை வழங்குகிறது.


நமது உடலில் கழிவுகள் நான்கு விதமாக வெளியேற வேண்டும். சிறுநீராக, மலமாக, வியர்வையாக, கார்பன் டை ஆக்சைடாக. இந்த கழிவுகள் சரியாக வெளியேறினால் நமக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

யார் ஒருவர் யோகாசனம் செய்கின்றாரோ அவர்கள் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். ஆரோக்கியம் நிச்சயம் கிடைக்கும். யோகாசனங்களை முறையாக கற்க குருவின் மேற்பார்வையில் பயில்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

யோகாசனம் செய்தால் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் கோனாடு சுரப்பி, அட்ரீனல் சுரப்பி, பாங்க்ரியாஸ் சுரப்பி, தைமஸ் சுரப்பி, தைராய்டு சுரப்பி, பாரா தைராய்டு சுரப்பி, பினியல் சுரப்பி, பிட்யூட்டரி சுரப்பிகள் சரியான விகிதத்தில் சுரக்கும், அதனால் முழுமையான ஆரோக்கியத்துடன் வாழலாம்.

நீரழிவு, ரத்த அழுத்தம், மூட்டுவலி, முதுகு வலி, கழுத்து வலி, மூலம், அல்சர் போன்ற நோய் வராமல் வாழ யோகாசனம் பயின்றால் மேற்குறிப்பிட்ட நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். நீரழிவு, ரத்த அழுத்தம் எல்லாம் பரம்பரை வியாதி என்று சொல்கிறோம். யோகாசங்களை முறையாக தினமும் பயின்றால் பரம்பரை வியாதிக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்திரனின் பலம் பெற சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிப்பது ஏன்...?