Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மயூராசனம்

மயூராசனம்
உள்ளங்கைகளை தரையில் ஊன்றி, முழங்கையால் வயிற்றின் இருபுறமும் அழுத்தமாக வைத்துக் கொண்டு, முழு உடலையும் ஒரு கொ‌ம்பை‌ப் போல தரையைத் தொடாமல் மேலெழும்பிய நிலையில் வைத்திருக்கும் ஆசனத்திற்கு மயூராசனம் என்று பெயர்.

சமஸ்கிருத மொழியில் மயூர் என்றால் மயில் என்று பொருள். இப்படத்தில் கண்டுள்ளது போல, உள்ளங்கையை தரையில் ஊன்றி, முழங்கையால் உடலைத் தாங்கி நிலையில் காணும் போது ஒரு மயில் நிற்பது போன்று இருப்பதால் மயூராசனம் என்று இந்த ஆசனத்திற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

செய்யும் முறை :

முழங்கால் தரையில் பதிந்திருக்க, நேராக நிமிர்ந்து அமரவும்

இரண்டு கைகளின் விரல்களையும் நன்கு விரித்துக்கொண்டு, உள்ளங்கை தரையில் அழுந்துமாறு, விரல்கள் உள்நோக்கிய வண்ணம் இருக்குமாறு வைக்கவும்

WD
முழங்கை முட்டி இரண்டும் வயிற்றில் இரு புறங்களிலும் நன்கு அழுத்தமாக வைத்துக் கொள்ளவும்

இரண்டு கால்களையும் பின்னோக்கி மெதுவாக நகர்த்தவும், கால்களை நன்கு நீட்டியதும், உடலின் மேல் பகுதியை மெதுவாக முன்னோக்கி நகர்த்த வேண்டும்

உடலின் மேல் பகுதியை முழுமையாக முன்னிற்கு கொண்டு வந்ததும், மேல் நோக்கி, முகம் அன்னார்ந்த நிலையில் உயர்த்த வேண்டும்

பிறகு நீட்டப்பட்ட கால்கள் இரண்டையும் ஒருசேர, நிதானமாக உயர்த்த வேண்டும்.
தலை முதல் பாதம் வரை ஒரே நேர்கோட்டில் உள்ள நிலையில் முழு உடலையும் சில நிமிடங்களுக்கு நிறுத்த வேண்டும்


இந்த நிலையில் சிறிது நேரம் உடலை நிலை நிறுத்தியப் பிறகு, முதலில் கால்களையும், பிறகு மேலுடம்பையும் தரையைத் தொடுமாறு வைத்துக்கொள்ள வேண்டும்

முதலில் கால்கள் இரண்டையும் பழைய நிலைக்கு இழுத்துக் கொண்ட பிறகு, உடலை உயர்த்திக் கொண்டு கைகளை நகர்த்தி அமர்ந்த நிலைக்கு வரவேண்டும்

எச்சரிக்கை :

இது மிக மிக முக்கியமான சமநிலை கொள்ளும் ஆசனமாகும்

இதனைச் செய்யும் போது முழு உடலின் எடையும் வயிற்றின் கொப்பூழ் கொடியிடத்தில் மையமாவதால், சமநிலை தவறும் சாத்தியம் உண்டு, எனவே மிக எச்சரிக்கையாக செய்யவும்

நிதானமாக ஒவ்வொரு நிலையையும் எட்ட வேண்டும், அவசரப்பட்டு வேகமாகச் செய்திடலாகாது

இந்த ஆசனத்தைச் செய்யும் போது தும்மலோ அல்லது இருமலோ வருவதுபோல் இருந்தால், பழைய நிலைக்கு வந்துவிடவேண்டும்

பயன்களும் கட்டுப்பாடுகளும் :

இந்த ஆசனம் செரியாமை (டிஸ்பெப்ஸியா), குடலிரக்கம் (விசரோப்டோசிஸ்) போன்றவற்றை குணப்படுத்திக் கொள்ள மிகச் சிறந்தது

முதுகுத் தண்டு, கழுத்து வலி பிரச்சனையுள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil