Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புற்று நோயாளிகளு‌க்கு உதவு‌ம் யோகாசனம்

புற்று நோயாளிகளு‌க்கு உதவு‌ம் யோகாசனம்
, சனி, 22 மே 2010 (11:41 IST)
உடலை ஆரோ‌க்‌கியமாகவு‌ம், பு‌த்துண‌ர்‌ச்‌சியாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல் யோகாசன‌த்‌தி‌ற்கு ஈடு இணையே ‌கிடையாது. அ‌ப்படி‌ப்ப‌ட்ட யோகாசன‌ம் செ‌ய்வதா‌ல் பு‌ற்று நோயா‌ளிக‌ள் ந‌ல்ல தூ‌க்க‌த்தை‌ப் பெற முடியு‌ம் எ‌ன்‌கி‌‌ன்‌றன‌ர் ஆரா‌ய்‌ச்‌சியாள‌ர்க‌ள்.

புற்று நோயாளிகள் யோகாசனம் செய்தால் நன்றாக தூக்கம் வரும், உட‌ல் களை‌ப்பு மா‌றி அதிக சக்தி கிடைக்கும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக மார்பக புற்று நோய்க்கு ஹீமோ தெரபி சிகிச்சை பெற்றவர்களுக்கு இந்த யோகாசனம் நல்ல பலனை அளித்ததாக கண்டறிய பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ரோச்செஸ்டர் மருத்துவ மையம் என்ற பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 400-க்கும் மேற்பட்டவர்களிடம் இந்த ஆய்வை நடத்தினார்கள்.

குறிப்பாக மார்பக புற்று நோய்க்கு ஹீமோ தெரபி சிகிச்சை பெற்றவர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். ஒரு பிரிவினர் வாரம் 2 முறை வீதம் ஒரு மாதத்துக்கு யோகாசனம் செய்ய வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கு நன்கு தூக்கம் வந்ததாகவும், அதிக சக்தியும், புத்துணர்ச்சியும் பெற்றதாகவும் தெரிய வந்தது.

இதனால் அவர்கள் தூக்க மாத்திரை உட்கொள்வதை விட்டு விட்டதையு‌ம் ஆரா‌ய்‌ச்‌சியாள‌ர்க‌ள் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளன‌ர். யோகாசனம் செய்யாத புற்று நோயாளிகளுக்கு தூ‌க்க‌ம் வருவ‌தி‌ல் ‌பிர‌ச்‌சினையு‌ம் இரு‌ந்தது, பு‌த்துண‌ர்‌ச்‌சி இ‌ல்லாம‌ல் எ‌ப்போது‌ம் களை‌‌ப்பு‌ற்று‌ம் காண‌ப்ப‌ட்டன‌ர்.

யோகாசன‌ம் செ‌ய்வதா‌ல், பு‌ற்று நோ‌ய் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் தூ‌க்க‌ம் வருவத‌ற்கு தூ‌க்க மா‌த்‌திரை சா‌ப்‌பிட வே‌ண்டிய அவ‌சிய‌ம் வராது எ‌ன்று‌ம், த‌ங்களது நோ‌யினா‌ல் ஏ‌ற்ப‌ட்ட உட‌ல் களை‌ப்பு‌ம், மன அழு‌த்தமு‌ம் குறை‌கிறது எ‌ன்று‌ம் பெ‌ண் ஆரா‌ய்‌ச்‌சியாள‌ர் கரெ‌ன் முடியா‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil