Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செ‌‌ன்னை‌யி‌ல் ‌சிற‌ப்பாக நட‌ந்த ஈஷா யோகா ப‌யி‌ற்‌சி

செ‌‌ன்னை‌யி‌ல் ‌சிற‌ப்பாக நட‌ந்த ஈஷா யோகா ப‌யி‌ற்‌சி
, வியாழன், 31 மார்ச் 2011 (15:32 IST)
செ‌ன்னை ப‌ச்சைய‌ப்ப‌ன் க‌‌ல்லூ‌ரி மைதான‌த்‌தி‌ல் 3 நா‌‌ட்க‌ள் நடைபெ‌ற்ற ஈஷா யோகா வகு‌ப்‌பி‌ல் ச‌த்குரு ஜ‌க்‌கி வாசுதே‌வ் கல‌ந்துகொ‌ண்டு ஷா‌ம்ப‌வி மஹாமு‌த்ரா ‌தியான ப‌யி‌ற்‌சியை ‌சிற‌ப்பான முறை‌யி‌ல் நட‌த்‌தியது ம‌க்க‌ளிடையே பெரு‌ம் வரவே‌ற்பை‌ப் பெ‌ற்றது.

இதுகு‌றி‌‌‌த்து ஈஷா யோகா சா‌ர்‌பி‌ல் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்பு வருமாறு :

ஈஷா அறக்கட்டளையின் சார்பில், சத்குரு அவர்களால் நேரடியாக தமிழில் நடந்த 3 நாள் ஈஷா யோகா வகுப்புகள் சென்னை மாநகரில் பச்சையப்பா கல்லூரி மைதானத்தில் மார்ச் மாதம் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஈஷா யோகா வகுப்பில் தொன்மை வாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி கற்றுத்தரப்பட்டது. சத்குரு அவர்களே நேரடியாக கலந்துகொண்டு, இந்த தியான வகுப்பினை நடத்தி, தியான தீட்சையும் வழங்கியது தனிச்சிறப்பாகும். இந்த வகுப்பில் 14,154 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

முன்னதாக மதுரை தமுக்கம் மைதானத்திலும், திருச்சி நேசனல் கல்லூரி மைதானத்திலும் நடைபெற்ற இதே போன்ற 3 நாள் வகுப்புகளில் 20,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். வேறெங்கும் இது போன்று 3 நாள் யோகா வகுப்புகள் இந்த அளவு பிரம்மாண்டமாக இதுவரை நடத்தப்பட்டதில்லை. தமிழ்நாட்டின் பல தென்மாவட்டங்களில் இருந்தும் பங்கேற்பாளர்கள் வந்திருந்தனர். தொலைதூரத்திலிருந்து வந்திருக்கும் பங்கேற்பாளர்களுக்கு தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த யோகா வகுப்பிற்காக பச்சையப்பா கல்லூரி மைதானத்தில் மேற்கூரை வேயப்பட்ட பிரம்மாண்டமான அரங்கு ஒன்று நிறுவப்பட்டிருந்தது. அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் இருக்கை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. தற்காலிகமாக தண்ணீர் வசதி, உணவு வசதிகள் மற்றும் கழிவறை வசதிகளும் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த வகுப்பின் ஏற்பாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த வகுப்பில், "இரண்டே நாளில் என்னுள் இருந்த கோபம், எரிச்சல், விரக்தி போன்றவை இல்லாது போனது ஆச்சர்யமாக தோன்றுகிறது. என் மனது இலேசாக மாறியதை உணரும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை" என்று ஒரு பங்கேற்பாளர் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
சமீபத்தில் சத்குரு அவர்கள் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து, 16 முக்கிய நகரங்களில் நடந்த ஆனந்த அலை மஹாசத்சங்கங்களில், யோகா மற்றும் தியானம் ஆகியவற்றின் சிறப்புகளை எடுத்துக்கூறி அருளுரை ஆற்றினார். அப்போது ஒவ்வொரு நகரத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சத்சங்கங்களில் பங்குகொண்டனர். அதன்பின் ஏற்பாடு செய்யப்பட்ட சத்குருவின் இந்த ஒவ்வொரு வகுப்புகளிலும் 10000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருப்பது யோகா, தியானம் ஆகியவற்றில் மக்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்ச்சியையே தெரிவிக்கிறது.

"தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆன்மீக புரட்சி ஏற்பட்டு அதன்மூலம் அன்பு, அமைதி, ஆனந்தம் உணரப்பட வேண்டும். தமிழகத்தை முன்மாதிரியாக கொண்டு இந்தியா மற்றும் உலக மக்கள் அனைவரிடமும் இந்த ஆனந்தம் மலர வேண்டும்" என்பது சத்குரு அவர்களின் விருப்பமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil