அல்சர் வருவதற்குக் காரணம் பொதுவாக நேரத்திற்கு சாப்பிடாமை, அதிகக் காரமான உணவுகளை சாப்பிடுவது, மசாலா உணவுகளை எடுத்துக் கொள்வதே ஆகும்.
நமது உணவுகளை செரிமானம் செய்வதற்காக பல்வேறு அமிலங்கள் வயிற்றில் சுரக்கின்றன.
உணவு சாப்பிடாத சமயத்தில், வெறும் வயிற்றில் இந்த அமிலங்கள் சுரப்பதால் இவை வயிற்றின் சவ்வுகளை அரித்து புண்ணை ஏற்படுத்திவிடுகின்றன.
இதேப்போலத்தான் அதிகக் காரமான உணவுகளை செரிமானம் செய்ய வேண்டும் எனில் அதிகமான அமிலங்கள் சுரக்க வேண்டும். எனவே அதிக அமிலம் சுரக்கும் போது அவையும் வயிற்றின் உள் சவ்வுகளை அரித்து புண்ணை ஏற்படுத்தி விடுகின்றன.
பொதுவாக குளிர் காலத்தில் கார வகைகளை சாப்பிடுவதை விட, வெயில் காலத்தில் சாப்பிடும் கார உணவுகளால் அதிக பாதிப்பு ஏற்படும்.
எனவே, நேரத்திற்கு சாப்பிட்டு, கார உணவுகளைக் குறைத்துக் கொள்வதால் அல்சரைத் தவிர்க்கலாம்.
பொதுவாகவே மிளகாய் உடலுக்கு ஆகாத ஒரு பொருளாகும். மனிதனைத் தவிர மற்ற விலங்குகள் மிளகாயை சாப்பிடுவதில்லை. மிளகாயை சாப்பிடத் துவங்கியதில் இருந்துதான் மனிதனுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படத் துவங்கின. அல்சர் வரக் காரணமே மிளகாய் தான். எனவே மிளகாயைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.
அல்சரைக் குறைக்க காரத்தைக் குறைக்க வேண்டியது மிகவும் அவசியம். அதே சமயம், நீங்கள் எப்போதும் சாப்பிட வேண்டிய நேரம் வரும் போது வயிறும் அந்த சமயத்தில் பசிக்கத் துவங்கும். ஒரு வேளை நீங்கள் சாப்பிட இன்னும் சில நேரம் பிடிக்கும் என்று அறிந்தால் உடனடியாக ஒரு டம்ளர் தண்ணீரையாவது குடியுங்கள்.
அல்சர் வந்தவர்கள் அதற்கான மருந்துகளை உட்கொண்டு, வயிற்றுக்கு ரத்த ஓட்டம் கிடைக்கக் கூடிய வகையிலான ஆசனங்களைச் செய்யலாம். யோக முத்ரா போன்ற ஆசனங்கள் அல்சருக்கு நல்ல பலனைத் தரும்.