தமிழ்.வெப்துனியா.காமில் வெளியான யோகா கட்டுரை படித்த சில வாசகர்கள் கேட்டிருந்த கேள்விகளுக்கான பதில்கள் இங்கே.
1. எந்த வயதில் இருந்து யோகா பயில துவங்கலாம்?
யோகா ஆசிரியர் திரு. சுப்ரமணியம் அவர்களின் பதில் : யோகா மட்டுமல்லாமல் எல்லா பயிற்சிகளையும் 7 வயது முதல்தான் பயில வேண்டும். அதற்கு முன்பும் பயிலலாம். ஆனால் அதனை பயிற்சியாக அல்லாமல் விளையாட்டு போல பழகலாம்.
7 வயதிற்குப் பிறகுதான் குழந்தைகளுக்கு பயிற்சி என்ன என்பதும், அதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளையும் அறிந்து கொள்ள முடியும். அதற்கு முன்பு அவர்களைச் செய்யச் சொன்னால், குழந்தைகள் ஒரு அவசரத்துடன், வேகமாகச் செய்யும் வாய்ப்பு உள்ளது. அதனால் 7 வயதிற்குப் பிறகு யோகாக் கற்றுக் கொடுக்கலாம். அதுவரை விளையாட்டாக சில ஆசனங்களை யோகா ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பார்கள்.
நரம்பு மற்றும் ஆஸ்துமா பிரச்சினைக்கு யோகா?
நரம்பு பிரச்சினை உடையவர்கள் எளிதான பயிற்சிகளை முதலில் செய்ய வேண்டும். பிறகு பிரணயம பயிற்சியை செய்யலாம்.
கும்பக பயிற்சியையும் மேற்கொள்ளலாம். நரம்பு பிரச்சினை உள்ளவர்கள் இரும்பு சத்து நிறைந்த உணவையும் அதிகம் உட்கொள்ள வேண்டும்.ஆஸ்துமா நோய் என்பது கருவிலேயே உருவாகும் ஒரு நோயாகும். எனவே, ஆஸ்துமா பாதித்தவர்களுக்கு எந்த அளவிற்கு நோய் தாக்குதல் இருக்கிறது என்பதைப் பார்த்துத்தான் ஆசனம் கூற முடியும்.தலை மேல் நோக்கியபடியே இருக்கும் ஆசனங்களை செய்யலாம். எளிய மூச்சுப் பயிற்சிகளைச் செய்யலாம். நாடி, சுதி, உஜ்ரி, கபில பாதி போன்ற ஆசனங்களை முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் துணையுடன் செய்யலாம்.3.
ஹெரினா பிரச்சினை உள்ளவர்கள் யோகா பயிலலாமா?ஹெரினா பிரச்சினை என்பது குடலிறக்க நோயாகும். பொதுவாக சிசேரியன் செய்து கொண்ட பெண்களுக்கு குடலிறக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சைகள் செய்தாலும், மீண்டும் வர வாய்ப்புண்டு.இதற்கு தலை கீழ் ஆசனங்கள் வெகுவாக உதவும். அதாவது வீபரீத கர்ணி, சிரசாசனம், சர்வாங்காசனம் போன்றவற்றை செய்யலாம். ஆனால் முறையான பயிற்சி இல்லாமல் செய்யக் கூடாது.கர்ப்பப் பை இறக்கத்திற்கும் இதுபோன்ற ஆசனங்கள் உதவும்.