யோகா ஆசிரியர் சுப்ரமணியம் அளிக்கும் சில பொதுவாக ஆலோசனைகள் இங்கே.
பொதுவாக நாம் நிமிர்ந்து உட்கார வேண்டும். நிமிர்ந்து உட்கார்ந்தாலே பல பிரச்சினைகள் வராது.
அதுபோலவே, பல மணி நேரம் குனிந்திருந்தாலோ, கைகளை குவித்து வைத்து மவுசைப் பிடித்திருந்தாலோ, அதற்கு எதிர்பக்க செயலை செய்ய வேண்டும்.
அதாவது முதுகை பின்பக்கமாக, நமது வயிறு முன்னுக்கு வரும்படியாக சில நொடிகள் இருக்கலாம். அதுபோலவே கைகளையும் பின்பக்கமாக வளைத்தபடி பிடித்திருக்கலாம். இது நல்ல பயிற்சியாக அமையும்.
பொதுவாக காபி, டீ அருந்துவதைத் தவிர்க்கலாம். அதிலும், காலையில் எழுந்ததும் டி குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதாவது காலையில் ஏற்கனவே வயிற்றில் பித்த நீர் சுரந்து இருக்கும். அந்த சமயத்தில் பித்தத்தை அதிகரிக்கக் கூடிய டீயைக் குடிப்பதால்தான் பல கோளாறுகள் ஏற்படுகிறது.
அதற்கு பதிலாக சுக்குக் காபி, மல்லி காபி, இஞ்சி காபி போன்றவை அருந்தலாம்.
குறைந்தபட்சம் இவைகளை மேற்கொண்டால் ஓரளவிற்கு நமது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பாற்றலாம்.