Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காய்ச்சலுக்கும், சளிக்கும் மருந்து தேவையில்லை

காய்ச்சலுக்கும், சளிக்கும் மருந்து தேவையில்லை
, வியாழன், 10 டிசம்பர் 2009 (15:26 IST)
காய்ச்சலுக்கும், சளிக்கும் மருந்து தேவையில்லை என்கிறார் நமது யோகா ஆசிரியர் சுப்ரமணியம்.

WD
அதாவது சளி வந்தால் 7 நாள் இருக்கும். ஒரு சில காய்ச்சல் ஒரு நாள் இருக்கும், ஒரு சில காய்ச்சல் 3 நாள் இருக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை.

காய்ச்சல் என்பது என்னவென்றால், ஏதாவது பெரிய வியாதியை ஏற்படுத்தும் கிருமி உடலுக்குள் நுழையும் போது அதனை எதிர்த்து வெள்ளை அணுக்கள் போராடும் நிகழ்வாகும்.

வெள்ளை அணுக்கள் போராடும் போது உடலின் வெப்பநிலை உயர்கிறது. இது இயற்கை. ஆனால் நாம் என்ன செய்கிறோம், காய்ச்சல் அடித்ததும் மருந்து சாப்பிட்டு உடனடியாக குணப்படுத்த முயற்சிக்கிறோம். இதனால் வெள்ளை அணுக்களின் வேலை பாதிக்கும்.

மலேரியா என்பது கொசு கடிப்பதில் இருந்து மலேரியாவைப் பரப்பும் கிருமி உடலின் ரத்தத்தின் மூலமாக கல்லீரலில் போய் சேர்ந்து அங்கிருந்து வெடித்து சிவப்பணுக்களை எல்லாம் பிடித்துக்கொண்டு பிறகு வெள்ளை அணுக்களை பிடிக்கும்.

மலேரியா கிருமிக்கும், வெள்ளை அணுக்களுக்கும் இடையே தாக்குதல் நடக்கும்போதுதான் கடுமையான காய்ச்சல் அடிக்கிறது.

வெள்ளை அணுக்கள் உடல் முழுக்க பரவிதான் மலேரியா கிருமியுடன் போராடுகிறது. அதனால்தான் மலேரியா காய்ச்சல் வந்தால் உடலால் தாங்க முடியாத அளவிற்கு இருக்கிறது.

எனவே ஒவ்வொரு காய்ச்சலுக்கு பல காரணங்கள் உண்டு.

மலேரியா வந்தால் அதனைக் குணப்படுத்தக் கூட ஆசனங்கள் உண்டு. அதாவது வெள்ளை அணுக்கள் அதிகம் உருவாகும் இடம் தொடைப் பகுதிதான். தொடைப் பகுதி பலமாக இருந்தால் வெள்ளை அணுக்கள் அதிகமாக இருக்கும். எனவே தொடைப் பகுதியை பலப்படுத்தும் ஆசனங்கள் மலேரியா பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும்.

மஞ்சள் காமாலைக்குக் கூட ஆசனப் பயிற்சிகள் உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil