Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2022ல் வெளியான டாப் 10 தமிழ் திரைப்படங்கள்!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (16:15 IST)
2022ல் வெளியான டாப் 10 தமிழ் திரைப்படங்கள்! 
 
இந்த வருடம் 2022ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரும் அளவில் ஹிட் அடித்து வசூல் குவித்த டாப் 10 திரைப்படங்கள் எதுவென இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 
 
1. கார்கி:
கௌதம் இராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இந்தாண்டு ஜூலை மாதம் வெளியான திரைப்படம் கார்கி. தமிழ் சட்ட நாடகத் திரைப்படமான இதில்  சாய் பல்லவி ஒரு பள்ளி ஆசிரியராக பணத்தேவைக்கு சிரமப்படும் அவரது குடும்பத்தையும், பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளும் அவரது அப்பாவை சட்டபூர்வமாக நிரபராதி என்பதை நிரூபிக்க போராடுவதே கதை. 
 
2.கட்டா குஸ்தி: 
செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர்  விஷ்ணு விஷால் நடித்து டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருந்தார்கள்.ஆக்ஷன், காமெடிய என டும்ப படமாக வெளியான கட்டா குஸ்தி ரசிகர்கள் ஆதரவை பெற்றது.  கட்டா குஸ்தி வீராங்கனையான  ஐஸ்வர்யா லட்சுமிக்கு சொந்த பந்தம் இல்லாத விஷ்ணு விஷாலுக்கு சில பல பொய்  சொல்லி அவரது மாமா கருணாஸ் திருமணம் செய்து வைக்கிறார். பின்னர் பொய்கள் தெரிய வரும்போது, ஐஸ்வர்யாவின் சித்தப்பா முனீஸ்காந்த் கருணாஸுடன்  கட்டா குஸ்தி சண்டையிடுவதை படமாக எடுத்திருக்கிறார். 
 
3.லவ் டுடே: 
இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் லவ் டுடே. இத்திரைப்படம் இன்றைய காதலும் காதலர்களை பற்றியும் கூறுகிறது. ஹீரோவும், ஹீரோயினும் சேரவேண்டும் என்றால் 4 நாளைக்கு ஒருவரின் ஒருவர் செல்போனை மாற்றிக்கொண்டு பின்னர் உங்கள் இருவருக்கும் சம்மதம் என்றால் திருமணம் செய்து வைக்கிறேன் என நிக்கிதாவின் அப்பா சத்யராஜ் கூறுகிறார். இருவரின் ரகசியங்களும் தெரிந்த பின்னர் அவர்கள் ஒன்று சேர்கிறார்களா என்பதே கதை. 
 
4.பொன்னியின் செல்வன்: 
பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றை இயக்குனர் மணிரத்தினம் படமாக இயக்கினார். இதில் இதில் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், விக்ரம் என 25 கதாபாத்திரங்களுக்கு மேல் நடித்திருந்தனர். 
 
5பீஸ்ட்: 
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. ராஜஸ்தானில் ஒரு பயங்கரவாதி கூட்டம் நடத்தும் அதிரடி தாக்குதலை ரா அதிகாரியான விஜய் முறியடிக்கிறார். ஆனால் இந்த தாக்குதலில் குழந்தை ஒன்று பரிதாபமாக பலியாகிறது. இதனால் அதிர்ச்சியடையும் விஜய் ரா பணியை விட்டுவிடுகிறார். தளபதி படம் என்பதால் பீஸ்ட் இந்த ஆண்டு அதிக வசூலை ஈட்டியது. 
 
6.நட்சத்திரம் நகர்கிறது: 
இயக்குனர் பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது முற்றிலும் வளர்ந்து வரும் கலைஞர்களை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கினார். இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட்  மாதம் திரைக்கு வந்தது. இந்த படம் சாதாரண காதல் படமாக இல்லாமல் காதலைப் பற்றிய அரசியல் படமாக வெளிவந்தது. 
 
7.திருச்சிற்றம்பலம்: 
தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படம் மறைக்கப்பட்ட ஒரு பெண்ணின் காதலை பற்றியது. இதில் நித்தியா  மேனன் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. இது இந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களில் ஒன்று 
 
8.இரவின் நிழல்கள்:
பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து வெளியான திரைப்படம் ‘இரவின் நிழல்’. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்த இப்படத்திற்கு வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ருத், ரோபோ சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்தனர். இப்படம், நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களுடன் திரையரங்கில் ஓடியது குறிப்பிடத்தக்கது.
 
9.ராக்கெட்ரி: நம்பி விளைவு: 
இந்திய விண்வெளி ஆய்வு மையம் முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வெளியான படம் இந்திய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான இதில் மாதவன் , சிம்ரன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். நடிகர் மாதவன் முதல் முறையாக இயக்குனராகப் பொறுப்பேற்று ஒரு சிறந்த படத்தைக் கொடுத்தார். இப்படம் இந்த ஆண்டின் சிறந்த திறப்பை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
 
10.வீட்ல விஷேஷம்:
'பதாய் ஹோ’ என்ற  ஹிந்தி படம் பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பார்வையாளர்களிடையேயும் அமோக வரவேற்பைப் பெற்றது. அந்தப் படதின் தமிழ் ரீமேக் தான் வீட்ல விசேஷம். இப்படத்தை  ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்திருந்தார். இதில் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பாலாஜியின் பெற்றோர் 50 வயதை கடந்த சத்யராஜ் ,ஊர்வசி. ஊர்வசி  கர்ப்பமாகிவிட இதை அவர்கள் எப்படி வெளியில் சொல்கிறார்கள் அதை தங்கள் பிள்ளைகள் எப்படி எடுத்துக்கொள்கின்றனர் என்பது கதை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஜிட்டல் அரெஸ்ட் என மிரட்டல்.. பயத்தில் விஷம் குடித்து உயிரை விட்ட அரசு பள்ளி ஆசிரியை..!

மக்கள் போராட்டங்களை கண்டு நடுங்குகிறது ஸ்டாலின் மாடல் அரசு: ஈபிஎஸ் விமர்சனம்..!

டங்ஸ்டன் விவகாரத்தில் நாடகமாடும் திமுக: அண்ணாமலை கண்டனம்..!

நாங்க போராட அனுமதி இல்லை.. நீங்க மட்டும் போராட்டம் நடத்தலாமா? - திமுகவிற்கு அண்ணாமலை கண்டனம்!

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் - 5 பேர் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கான விபத்துகள்

அடுத்த கட்டுரையில்
Show comments