Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2021ம் ஆண்டின் டாப் 10 தமிழ் படங்கள்!

Advertiesment
Top 10 tamil movie
, புதன், 29 டிசம்பர் 2021 (14:55 IST)
2021ம் ஆண்டின் டாப் 10 தமிழ் படங்கள்!
 
10. அரண்மனை 3
சுந்தர் சி. இயக்கத்தில் 2021இல் வெளியான தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படம் அரண்மனை 3. இந்த படத்தில் சுந்தர் சி., ஆர்யா, ராசி கன்னா, ஆண்ட்ரியா ஜெரெமையா, சாக்‌ஷி அகர்வால், விவேக், மைனா நந்தினி, யோகி பாபு, நளினி, மனோபாலா, சம்பத் ராஜ், ஓவி பண்டர்கர், வின்சென்ட் அசோகன் மற்றும் பலரும் நடித்தனர்.  இந்த படம் அட்டர் பிளாப் ஆனது குறிப்பிடத்தக்கது. 
 
9. ஜகமே தந்திரம் 
தனுஷ் நடித்துள்ள 40வது தமிழ் திரைப்படமம் ஜகமே தந்திரம்.  இந்த இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கி வை நொட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்தது. இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். இதில் தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கலையரசன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த ஆண்டு இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறாதது குறிப்பிடத்தக்கது. 
 
8. எனிமி 
ஆனந்த் ஷங்கர் எழுதி இயக்கி வெளிவந்த அதிரடித் திரைப்படமான "எனிமி" மினி ஸ்டுடியோஸ் பதாகையின் கீழ் வினோத் குமார் தயாரித்திருந்தார். இந்த படத்தில் விஷால், ஆர்யா, மிர்னாலினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். 
 
7. அண்ணாத்தே 
ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் ரஜினியின் 168 ஆவது தமிழ்த் திரைப்படமாகும். சிவா எழுதி, இயக்கிய இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது .இதில் ரஜினிகாந்துடன் இணைந்து நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. 
 
6. டாக்டர் 
சிவாகார்த்திகேயன் நடித்து அக்டோர் 9ம் தேதி வெளியான திரைப்படம் டாக்டர்.  காமெடி திரைப்படமான இது பெரும்பலமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . இந்த படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. 
 
5. மாநாடு
வெங்கட் பிரபு எழுதி இயக்கி, சுரேஷ் காமாட்சி தயாரித்த மாநாடு திரைப்படம் சிம்புவின் கெரியருக்கு மிகச்சிறந்த திரைப்படமாக அமைந்தது.  இப்படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். இப்படம் இந்த வருடம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. 
 
4. சார்பட்டா பரம்பரை
இந்திய தமிழ் வரலாற்று, விளையாட்டு அதிரடித் திரைப்படமான சர்பட்டா பரம்பரை ஜூலை 22ல் வெளியானது. ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.நிறைய கதாபாத்திரங்கள் கொண்டு காருக்கு அழுத்தம் கொடுத்து வெளியான இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. 
 
3. கர்ணன் 
மாரி செல்வராஜ் எழுதி ஏப்ரல் 9ம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன்.  இந்த திரைப்படத்தில் தனுஷ், யோகி பாபு, லால், நடராஜன் சுப்பிரமணியம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் கதையானது 1995 கொடியன்குளம் சாதிக் கலவரத்தை அடிப்படையாக கொண்டது.
 
2.  மாஸ்டர் 
தளபதி விஜய் நடிப்பில் ஜனவரி 13ல் வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார்கள். மாஸ் ஹீரோ திரைப்படம் என்பதால் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. 
 
1. ஜெய் பீம் 
இருளர் இன மக்களின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் திரைப்படமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ஜெய்பீம். இத்திரைப்படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோள் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த திரைப்படம் என்ற இடத்தை பிடித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா விடுதலை முதல் ஒமிக்ரான் வரை.... 2021 கடந்து வந்த பாதை!!