உலகமே அன்னாந்து பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும், பரபரப்பான வகையிலும் நடைபெற்று வருகிறது.
முதல் முறையாக கறுப்பர் ஒருவர் அதிபராவார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்புக்கு இடையே எந்தவித ஆரவாரமும் இல்லாமல் வந்து தமது வாக்கினை சிகாகோவில் செலுத்தினார் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஒபாமா.
முன்னெப்போதும் இல்லாதவகையில் அமெரிக்காவில் இந்த அதிபர் தேர்தலில் அதிக விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும், இளைஞர்களின் வாக்களிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் சிஎன்என் தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கிறது.
இளைஞர்களின் வாக்கு விகிதம் அதிகரித்திருப்பதாலேயே ஒபாமாவிற்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயார்க்கிலும் அதிகாலை முதலே வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களித்து வருவதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.