Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலை கவலையளிக்கிறது: பான்-கி-மூன்

Advertiesment
இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலை கவலையளிக்கிறது: பான்-கி-மூன்
கொழும்பு , திங்கள், 25 மே 2009 (13:18 IST)
சிறிலங்காவிற்கான பயணத்தின் போது இறுதியாக மோதல் நடைபெற்ற பகுதி மற்றும் இடைத்தங்கல் முகாம்களைப் பார்வையிட்ட ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன், இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலை கவலையளிப்பதாகக் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிறிலங்க ராணுவம் இறுதித் தாக்குதல் நடத்திய இடத்தைப் உலங்கு வானூர்தியில் இருந்து பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன், அதன் பின்னர் அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் சி.என்.என். தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கியதாக புலிகள் ஆதரவு இணையதளமான புதினம் தெரிவித்துள்ளது.

அந்த நேர்காணலில், இறுதியாக நடைபெற்ற போரில் கனரக ஆயுதங்களின் பயன்பாடிற்கான தெளிவான ஆதாரங்களை நான் காணவில்லை. இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலைகண்டு மிகுந்த கவலை அடைந்துள்ளேன்.

உலகம் முழுவதிலும் உள்ள இதனை ஒத்த பகுதிகளுக்கு நான் பயணம் மேற்கொண்டுள்ளேன், ஆனால் இங்கு (சிறிலங்கா) கண்டதை போல நான் எங்கும் கண்டதில்லை. பலர் தமது உறவுகளை இழந்துள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை என்று பான்-கி-மூன் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil